உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் அருகில் உள்ள மிலக் என்ற கிராமத்து மக்கள் இரவு நேரம் ஆகிவிட்டால் என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் இருக்கின்றனர். இரவில் மர்ம பெண் ஒருவர் நிர்வாணமாக தெருக்களில் நடமாடுகிறார். மர்மான 25 வயது மதிக்கதக்க பெண் நள்ளிரவு நேரத்தில் அடுத்தவர்களில் வீட்டு கதவை தட்டுவது. காலிங் பெல்லை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. நிர்வாண பெண் அடுத்தவர் வீட்டுக்கதவை தட்டும் கண்காணிப்பு காட்சி சோசியல் மீடியாவிலும் பரவி இருக்கிறது. கிராம மக்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளனர். நிர்வாண பெண்ணை நேரில் பார்த்த சீமா தேவி என்ற பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார்.

அவர் தனது புகாரில், 25 வயது மதிக்கத்தக்க நிர்வாண பெண் தனது வீட்டு கதவை தட்டியதாகவும், ஐந்து நிமிடம் கழித்து சென்றுவிட்டதாகவும், அவரை இரண்டு பேர் பைக்கில் பின் தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் போலீஸாரும் அவர்களை பின் தொடர்ந்ததாக அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ரவி இது குறித்து கூறுகையில், ``மர்மமான பெண் நிர்வாணமாக வீட்டுக்கதவை தட்டுவது போன்ற வீடியோ வைரலாகி இருக்கிறது. அவர் என்ன நோக்கத்தில் கதவை தட்டினார் என்று தெரியவில்லை. அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் பெண்ணை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. மர்ம பெண் நடமாடிய பகுதியில் இரவில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி இருக்கிறோம். யாராவது மர்ம பெண்ணை மீண்டும் பார்த்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அப்பெண் மனநல குறைபாடு உள்ளவர் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க உத்தரப்பிரதேசம்: நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் மர்ம பெண்! - போலீஸ் விசாரணை