``மக்களைக் கொட்டகையில் அடைத்து வைப்பதுதான் ஜனநாயகமா?" - ஸ்டாலினைச் சாடிய எடப்பாடி பழனிசாமி

0

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். வில்லரசம்பட்டி தனியார் ரிசார்ட்டிலுள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து பிரசாரப் பயணத்தை தொடங்கிய அவர், முதலில் வீரப்பம்பாளையத்தில் பிரசாரம் செய்தார். அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு, கட்சியினர் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர். அதனையடுத்து வெட்டுக்காட்டுவலசு, நாராயணவலசு, சம்பத் நகர், பெரியவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்த அவ,ர் இறுதியில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``தென்னரசு ஏற்கெனவே இந்தத் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணிபுரிவார். இந்தத் தொகுதியில் தேர்தல் தேதி அறிவித்தது முதல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க-வினர் வாக்குச் சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க-வினர் வாக்குச் சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் மக்களை ஆடு, மாடுகளைப் போல கொட்டகையில் அடைத்து வைத்திருப்பதுதான் ஜனநாயகமா?

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

மக்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின், ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வேண்டிய மக்களின் ஏழ்மை நிலையைக் கருதி ரூ.2,000 வீதம் பணம் கொடுத்து கொட்டகையில் அடைத்து வைத்திருக்கிறார். இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல். ஒரு முதல்வராக இருப்பவரே தேர்தல் விதிமுறைகளை மீறலாமா, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் பணத்தை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் பணம். நான் இன்று பிரசாரம் செய்ய வருவதை அறிந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுப்பதற்காக ஏழை மக்களை அடைத்து வைத்து அவர்களுக்கு ரூ.2,000 பணம் கொடுக்கிறார்கள். என்னால் மக்களுக்குப் பணம் கிடைப்பது எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க வேண்டும். தி.மு.க-வினர் எங்களுக்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கிறீர்கள். அதையெல்லாம் மீறித்தான் இந்த மக்கள் கூட்டம் கூடியிருக்கிறது. இந்தத் தொகுதியில் வெற்றியும் பெற வைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

ஸ்டாலினால் அ.தி.மு.க-வின் வெற்றியை தடுத்துவிட முடியாது. உண்மையான, நேர்மையான ஜனநாயக முறைப்படி மக்களைச் சந்திக்க வேண்டும். இங்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த 25 அமைச்சர்கள் தங்கியிருந்து பிரசாரம் செய்து வருகின்றனர். உங்களுக்கு எங்களைக் கண்டு பயம், தோல்வி பயம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆட்களே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி சொன்னார். ஈரோட்டில் வந்து பாருங்கள். எங்களுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கும் மக்கள் வழியெங்கும் காத்திருக்கின்றனர். உங்களைப் போல வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைக்கவில்லை. முன்பு நான் முதல்வராக இருந்தபோது இடைத்தேர்தல் நடந்தது. நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் எங்கும் மக்களை அடைத்து வைக்கவில்லை. அப்போதெல்லாம் நாங்கள் ஜனநாயக முறைப்படிதான் மக்களை வாக்களிக்க அனுமதித்து, அ.தி.மு.க. மாபெரும் வெற்றியைப் பெற்றது. உஙகளுக்கு தைரியம் இருந்தால், எங்கள் வேட்பாளர்களை எதிர்க்கும் சக்தி இருந்தால் நேர்மையான முறையில் தேர்தலைச் சந்தியுங்கள். உங்களுக்கு தேர்தல் பயமும், ஜூரமும் வந்துவிட்டது.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

தனக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். உங்களுக்கு செல்வாக்கு அதிகமாக இருந்தால் எதற்காக மக்களை அடைத்து வைக்கிறீர்கள், தேர்தல் யுத்தத்தில் நேருக்கு நேராக சந்தித்தால் அது ஆண்மை. இதற்கு முன் நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் இதுபோன்ற நிலையை தமிழகம் சந்தித்ததில்லை. இந்தத் தொகுதியில்தான் கொள்ளையடித்தப் பணத்தை அள்ளி வீசி செலவு செய்கிறார்கள். இதனை தடுக்க தேர்தல் ஆணையம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா, அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். காவல்துறை ஏவல்துறையாகச் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் முறையாகச் செயல்படவில்லை. 120 இடங்களில் கொட்டகை அமைத்து மக்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அதை ஆதாரத்துடன் படம் பிடித்திருக்கிறோம். அதை தேர்தல் ஆணையத்திடம் புகாராக கொடுத்திருக்கிறோம்.

பிரசார வாகனம்

இந்த 21 மாதங்களில் கொள்ளையடித்தப் பணத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்கள். அதை தாராளமாக பெற்றுக் கொள்ளுங்கள். ஓர் அமைச்சர் மக்கள்மீது கல்லெடுத்து எறிகிறார். முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலு கையை வெட்டுவேன் என்கிறார். எம்.பி-யே கையை வெட்டுவேன் என்று கூறியதும், தமிழகத்தில் தலையை வெட்டும் ரௌடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. 13-ம் தேதி மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 9 கொலைகள் நடந்தன. இந்த அரசில் கொலை, கொள்ளை, ரௌடிஸம் என சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராக இருப்பதால் மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. பாலியல் வன்கொடுமை அடிக்கடி நடக்கிறது. அதைப்பற்றி முதல்வருக்கு கவலையில்லை.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

எங்கள் ஆட்சியின்போதுதான் ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டு வளர்ச்சி பெற்றது. மேம்பாலம், ரூ.81 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1,084 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது, ரூ.70 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்கப் பணிகள், எங்கள் ஆட்சியில் எந்த சூழலிலும் மின்வெட்டு கிடையாது. ஈரோடு-பள்ளிபாளையம் பாலம் என பல சாதனைகளை புரிந்திருக்கிறோம். ஆனால் இப்போதோ மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டுவரி, கடை வரி பல மடங்கு உயர்ந்துவிட்டது. எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதாகவும், நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயுவுக்கு ரூ.100 வீதம் மானியம் தருவதாகச் சொன்னார்களே... தந்தார்களா என்பதை அவர்களிடமே கேளுங்கள். மக்களை ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பாடம் கற்பியுங்கள்" என்றார்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

முன்னதாக வெட்டுக்காட்டு வலசு பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ``தி.மு.க-வினர் கமிஷன், கரப்ஷன், கமிஷனில்தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். கோட்டையில் இருக்க வேண்டிய அமைச்சர்கள் நாட்டு மக்களின் பிரச்னையை தீர்க்காமல் இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கே ஓர் அமைச்சர் புரோட்டா சுடுகிறார். இதுதான் அமைச்சரின் வேலையா, நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் அமைச்சராக்கியிருக்கிறார்கள். அதைவிட்டு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

பூரண கும்ப மரியாதை செலுத்த காத்திருக்கும் பெண்கள்...!!

தேர்தல் விதிமுறைகளை மீறிய அ.தி.மு.க-வினர்!

தி.மு.க-வினர் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக எடப்பாடி பழனிசாமி வழிநெடுகிலும் குற்றம்சாட்டினாலும், அ.தி.மு.க-வினரும் தேர்தல் விதிமுறைகளை மீறுவதில் தி.மு.க-வினருக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை பல இடங்களில் காணமுடிந்தது.

வீரப்பம்பாளையத்தில் ஏராளமான கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டிருந்ததுடன், மாவிலைத் தோரணங்கள், வாழை, கரும்பு தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. இவற்றுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெவ்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட பெண்களிடம் சிறிய குடங்களும், தேங்காயும் கொடுத்து எடப்பாடி பழனிசாமியையும், தென்னரசுவையும் வரவேற்பதற்காக பூரண கும்ப மரியாதையுடன் காத்திருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பூரண கும்ப மரியாதை செய்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருப்பதாகவும், வீட்டுக்கு போகும்போது திருப்பிக் கொடுத்தால் ரூ.500 வீதம் வழங்கப்படும் என்றும், இது தவிர நபர் ஒருவருக்கு ரூ.500 கொடுத்து தங்களை வெவ்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வந்ததாகவும் பெண்கள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க ``மக்களைக் கொட்டகையில் அடைத்து வைப்பதுதான் ஜனநாயகமா?" - ஸ்டாலினைச் சாடிய எடப்பாடி பழனிசாமி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top