கோவிட் தொற்று பல பாதிப்புகளை மக்களிடையே ஏற்படுத்தியது. ஆனால் கோவிட் தொற்று முழுமையாக மக்களை விட்டு அகன்று விட்டதா என்பது கேள்விக்குறியே… உண்மையில் எதிர்காலத்தில் கோவிட் தொற்று குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

`கோவிட் 19' பற்றிய பாடப்புத்தகத்தின் அத்தியாயம் ஒன்றை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு இந்தப் புத்தகம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில், `Future of Covid’ என்ற தலைப்பில், எதிர்காலத்தில் கோவிட் தொற்று எப்படி இருக்கும் என்பது கூறப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசிகள், நோய்க்கால மேலாண்மை சிக்கல்கள், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் நீண்ட கோவிட் தொற்றின் பாதிப்புகள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றில் தீவிரமாகப் பணியாற்றியவரும், இந்திய மருத்துவ சங்க கேரள ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவருமான மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன் இந்தப் பாடப்புத்தக அத்தியாயத்தின் ஆசிரியர்.
எதிர்கால கோவிட் பற்றி புத்தகத்தில் கூறப்பட்ட தகவல்கள்:
*இதன்பின் வைரஸ் கடுமையான நோயை ஏற்படுத்தாது. நோய் தொற்றுகள் அறிகுறி இல்லாமல் இருக்கும் அல்லது லேசாக உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும்.
*மாறுபட்ட உயிரியல் பண்புகளுடன் புதிய வேரியன்ட்கள் வரலாம். இவற்றை நிராகரிக்க முடியாது. ஏனெனில் பல வைரஸ்களை போல அல்லாமல், SARS COV 2 பல உறுப்பு அமைப்புகளைச் சேதப்படுத்தும் திறன் கொண்டது.
* இதயம், ரத்த நாளங்கள், மூளை, நோயெதிர்ப்பு சக்தி, நுரையீரல் உள்ளிட்ட அமைப்புகளைச் சேதப்படுத்தும் திறன் கொண்டது. அதுவும் இது நோய்க்கிருமியாக மாறும் பட்சத்தில் கடுமையான விளைவுகளைத் தூண்டலாம்.

*நிபுணர்களின் கணிப்புகளைத் தாண்டி, ஒரு தொற்றுநோய் செயல்படுகிறதெனில், அதற்குப் பல காரணங்கள் இருக்கும். இது மற்றொரு சுழற்சி வைரஸ் தொற்று.
*இப்போது, கோவிட் பற்றி யாரும் படிக்கவோ பேசவோ விரும்புவதில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், கோவிட் ஒருபோதும் கடந்தகால அறிவியலாக இருக்காது. கோவிட் பல புதிய விஷயங்களை மருத்துவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.
*இன்றும் லாங் கோவிட் பாதிப்பு என்பது நோயாளிகளுக்கு பெரிய கவலையாக உள்ளது. எனவே, வருங்கால மருத்துவர்கள் கோவிட் தொற்றைப் புரிந்துகொள்வது முக்கியம். எனவே இந்தப் புத்தகம் மருத்துவ மாணவர்களுக்குப் பரவலாக விநியோகிக்கப்படும்.
மேலும் படிக்க எதிர்கால கொரோனா எப்படி இருக்கும்? இந்திய மருத்துவ சங்கத்தின் விரிவான பாடப் புத்தகம்!