கிழக்கு மாநிலங்களின் மத்திய அரசின் ஆலோசகர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இந்திய நீதித்துறையை கேள்வி கேட்க முடியாது, குறிப்பாக நீதிபதிகளின் ஞானத்தை பொது ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. இந்திய நீதித்துறையும், இந்திய ஜனநாயகமும் நெருக்கடியில் இருக்கிறது என்பதை உலகுக்குச் சொல்ல, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது சிலரின் திட்டமிட்ட நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சி.
இந்தியாவையும் அதன் ஜனநாயக அமைப்பையும் தவறான நோக்கங்களுடன் இழிவுபடுத்தும் எந்த பிரசாரமும், வெற்றிபெற முடியாது. அமெரிக்கா தன்னை பழமையான ஜனநாயகம் என்று உரிமை கோரலாம். ஆனால், உண்மையிலேயே இந்தியாதான் ஜனநாயகத்தின் தாய். நீதித்துறை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது நல்ல அறிகுறியல்ல. நீதித்துறை பொது விமர்சனத்திலிருந்து வெகுதொலைவில் இருக்க வேண்டும். இந்த விமர்சனத்துக்கு காரணம் நீதிபதிகள் நியமனத்தை நீதித்துறை ஆணைகள் மூலம் செய்யவது தான். இதை அரசு வேண்டாம் எனக் கருதுவதற்கு அரசியலமைப்புச் சட்டமே காரணம்.

நீதித்துறையின் கருத்து சில சமயங்களில் வேறுபடலாம், ஏனெனில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கருத்து இருக்க முடியாது. இந்தியாவை பாதுகாப்பாக மாற்ற அரசு விரும்புகிறது, எனவே அதற்காக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் 65 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இதுவரை, 1,486 தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க ``நீதித்துறை, ஜனநாயகம் நெருக்கடியில் உள்ளதாக சிலர் தவறாக பரப்புகிறார்கள்" - கிரண் ரிஜிஜு