``அண்ணா நீங்க தயவு செய்து வாங்க..!" - திருமாவை வெளியே அழைக்கும் அண்ணாமலை

0

பா.ஜ.க சார்பாக, சென்னை பெருங்கோட்டத்துக்குட்பட்ட `அனைத்து சக்தி கேந்திர' பொறுப்பாளர்களுடனும், திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடனும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வழிகாட்டுதல்படி இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “பா.ஜ.க-வுக்கும், வி.சி.க-வுக்கும் இடையிலான யுத்தம் கிடையாது. வி.சி.க-வுக்கும் அண்ணன் தடா பெரியசாமிக்கும் நடக்கும் யுத்தம் இது. வி.சி.க-வினர் அண்ணன் தடா பெரியசாமியிடம் போட்டியிட்டு, அதன் பிறகு எங்கள் கிளை தலைவரிடம் மோதுங்கள். பா.ஜ.க என்பது இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய இயக்கம். அதில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எத்தனை மாநிலங்களில் எங்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

திருமாவளவன் அண்ணாவுக்கு துணை முதல்வராக வேண்டும் என்று கொஞ்சம் ஆசை. அதனால் ஸ்டாலின் அவர்களிடம், ‘கூட்டணியைவிட்டு போய்விடுவேன், கூட்டணியைவிட்டு போய்விடுவேன்’ என்று சொல்லி கொண்டிருக்கிறார். அப்படி போவதாக இருந்தால் அண்ணா நீங்க தயவு செய்து வாங்க. நானே மாலையைப் போட்டு வெளியே வாங்கனு கூப்பிடுகிறேன். அதற்காக பா.ஜ.க-வை திட்டிவிட்டு ஒரு காரணத்தை கண்டுபிடிப்பதாக ஏன் ட்ராமா போடுகிறீர்கள். நானும் ஒரு மாதமாகப் பார்த்துக் கொண்டிருக்கேன்.

அண்ணாமலை

திருமாவளவன் கூட்டணியைவிட்டு வெளியே வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஆனால், அவர் போகிற கூட்டணியில் இவர்கள் எல்லாம் இருக்கக் கூடாதாம். யார் இருக்கக் கூடாது, ஆப்பில், ஆரஞ்ச், மாதுளை பழம் இல்லை என்றால் வருவாராம். உங்களுக்குத்தான் இருக்க மனதில்லை. பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கிறார்கள். உங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை. திருமாவளவனை சமூகநீதிக்கு எதிராக தி.மு.க-வினர் நடத்துகிறார்கள் என்றால், திருமாவளவன் அண்ணா வெளியே வர வேண்டுமில்லையா? பா.ஜ.க-வை திட்டிவிட்டு ஒரு பில்டப் கொடுத்துவிட்டு, அதை வைத்து வெளியே வருவதற்கு எங்களை ஏன் பகடைக்காயாகப் பயன்படுத்த வேண்டும்.

திருமா அண்ணாவிடம் சொல்வது, முதலில் தடா பெரியசாமி அண்ணனை உருப்படியாக எதிர்த்து நில்லுங்கள். அவரை எதிர்க்கிறேன் என்று அவர் வீட்டில் போய் அவரது காரை அடிக்க தெரியாமல் அடிப்பது, கண்ணாடியை உடைக்க தெரியாமல் உடைப்பது என உங்க பசங்க பண்ணிட்டிருக்காங்க. மக்கள் எங்கள் பக்கம் வர ஆரம்பித்துவிட்டார்கள். பட்டியலின சகோதர, சகோதிரிகள் பா.ஜ.க பக்கம் முழுமையாக வந்துவிட்டார்கள். தடா பெரியசாமி, வி.பி.துரைசாமி அண்ணன் போன்றவங்க கட்சியில் மிகப்பெரிய தலைவர்களாக இருக்கிறார்கள். பா.ஜ.க போல் உங்கள் கட்சியில் சமூகநீதி அடிப்படையில் பதவி கொடுத்திருக்கிறோம் என்று ஒருவரைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

திருமாவளவன், துரை வைகோ, வேல்முருகன்

நேற்று (பிப்-28) தி.மு.க பி டீம் கூட்டம். இன்று (மார்ச்-1) தி.மு.க ஏ டீம் கூட்டம். முதலமைச்சர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதென்றால் சொல்லுங்கள். ஆனால், இன்று வருபவர்கள் எல்லாம் யாரை திட்டுவார்கள் என்று பாருங்கள். கொஞ்ச நேரம் பிரதமர் மோடியை, கொஞ்ச நேரம் பா.ஜ.க, கொஞ்ச நேரம் தமிழ்நாட்டிலிருக்கும் பா.ஜ.க தலைவர்களை திட்டிவிட்டு இரவு நல்லா சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். பர்ஸ்னல் ஜெட்டில் வந்து சமூகநீதி பேசிவிட்டு போவதற்கு ஒரு ட்ராமா. அதற்கு ஒரு கூட்டம். தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா. மக்களிடம் நீங்கள் கூட்டம் போட, போட எங்களுக்கு நீங்களே பிரசாரம் செய்கிறீர்கள். இதனால் நாங்கள் பிரசாரமே செய்ய வேண்டாம். தமிழக மக்கள் எங்கள் பக்கம் வர ஆரம்பித்துவிட்டார்கள்” என்று காட்டமாக விமர்சித்தார்.


மேலும் படிக்க ``அண்ணா நீங்க தயவு செய்து வாங்க..!" - திருமாவை வெளியே அழைக்கும் அண்ணாமலை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top