`மூன்றாவது முறை சீன அதிபராகப் பதவியேற்ற ஜி ஜின்பின்!' - இனி வாழ்நாள் வரை அவர்தான் சீன அதிபரா?

0

சீன அரசியல் வரலாற்றில் மாவோவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் ஜி ஜின்பிங். கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், ஜி ஜின்பிங் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நாட்டின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 10-03-2023-ம் தேதி நாடாளுமன்றத்தில் சீன அதிபராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முறைப்படி பதவியேற்றார் ஜி ஜின்பிங்.

ஜி ஜின்பிங்

முன்பொரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஜி ஜின்பிங், இன்று அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, சீன வரலாற்றிலேயே மாவோவுக்குப் பிறகு சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவராக உருவெடுத்திருக்கிறார். இதன் பின்னணி குறித்து அலசுவோம்.

ஜி ஜின்பிங்கின் இளமைப் பருவம்:

சீனாவின் மாபெரும் தலைவரான மாவோவின் (மா சே துங்) நெருங்கிய நண்பரான ஜி சோங்ஷூனுவின் மகன்தான் ஜி ஜின்பிங். சீன கம்யூனிஸ்ட் கட்சியை மாவோ தோற்றுவித்தபோது, அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்தார் ஜி ஜின்பிங்கின் தந்தையான சோங்ஷூனு. ஆனால் துரதிஷ்டவசமாக, 1968-ம் ஆண்டு சீனப் புரட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி சோங்ஷூனை கட்சியிலிருந்து நீக்கியதோடு, அவரைச் சிறையிலும் அடைத்தார் மாவோ. தண்டனை விதிக்கப்பட்டவரோடு அவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாரும் எந்தவிதமானத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது அன்றைய சீன சட்டம். அதனால் தந்தையின் ஆதரவில்லாமல் ஏழ்மை நிலைக்குச் சென்ற ஜி ஜின்பிங்கின் குடும்பம் நகரத்தைவிட்டு இடம்பெயர்ந்து லியாங்ஜியாஹே என்ற கிராமத்துக்கு குடிபெயர்ந்தது. அங்கு, படித்துக்கொண்டே விவசாய வேலைகளிலும் ஈடுபட்டுவந்தார் ஜி ஜின்பிங்.

மாவோ

தடைகளைத் தாண்டி கம்யூனிஸ்ட்டில் கால்பதித்த ஜி ஜின்பிங்:

அதன் பிறகு 1972-ல் அப்போதைய சீன அதிபர் என்லாய், `சிறையில் அடைக்கப்பட்டவர்கள் குடும்பத்தோடு இணையலாம்' என்ற உத்தரவைப் பிறப்பிக்க, சோங்ஷூனுவோடு மீண்டும் இணைந்தது ஜி ஜின்பிங் குடும்பம். ஜி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்மீது கொண்ட பற்றால், கட்சியில் சேர பலமுறை விண்ணப்பித்தார். ஆனால், தந்தையின் சிறைத் தண்டனையைக் காரணம் காட்டி அவரின் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. இருப்பினும், கடைசியாக 1974-ல் அவர் அனுப்பிய விண்ணப்பத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ள அடிப்படைத் தொண்டராக இணைந்தார் ஜி ஜின்பிங். அதன்பிறகு ஜி ஜின்பிங்குக்கு கட்சியில் ஏறுமுகம்தான்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்

கம்யூனிஸ்ட் கட்சி மாநாடும்... அடுத்தடுத்த அதிபர் பொறுப்பும்:

2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 17-வது மாநாட்டில், ஒன்பது பேர் கொண்ட கட்சியின் தலைமைக் குழுவான `பொலிட்பீரோ'வின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங். அதன்பிறகு, 2008-ல் சீனாவின் துணை அதிபராக முதன் முறையாகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர், 2012-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 18-வது சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், முதன் முறையாகப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங். அதையடுத்து, 2013-ம் ஆண்டு மார்ச்சில் முதன் முறையாக சீன அதிபராகப் பதவியேற்றார்.

அதைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு நடைபெற்ற 19-வது சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இரண்டாவது முறையாக கட்சியின் பொதுச்செயலாளராகவும், சீன அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங். அதன்பிறகு 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றார் ஜி ஜின்பிங். அந்த நிலையில், `சீனாவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே, அதாவது 10 ஆண்டுகள் மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும்' என்றிருந்த சட்டத்தை நீக்கி, புதிய சட்டத் திருத்தத்தை மேற்கொண்டார். மேலும், 68 வயதுக்கு மேலாக உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஓய்வுபெற வேண்டும் என்ற விதியிலிருந்தும் சாமர்த்தியமாக விதிவிலக்கு பெற்றார். கட்சியின் பொதுச்செயலாளராக, மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக, நாட்டின் அதிபராக மூன்று முக்கிய அதிகாரபீடங்களில் தொடர்ந்தார். அப்போதே ஜி ஜின்பிங் தனது ஆயுள்வரை அதிபராகப் பதவிவகிக்கப் போகிறார் என்ற கருத்து வலுப்பெற்றது.

ஜி ஜின்பிங்

இனி ஆயுள்வரை ஜி ஜின்பிங்கே அதிபர்?!

அதைத் தொடர்ந்து, 2021 நவம்பர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய உயர்நிலைக்குழு மாநாட்டில், தற்போது இரண்டாவது முறையாக சீன அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங்கையே மூன்றாவது முறையாகவும் அதிபராகத் தேர்ந்தெடுக்க வழிசெய்யும் 14 பக்கத் தீா்மானத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மாநாட்டில், மீண்டும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சீன அதிபராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி ஜின்பிங்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்த நிலையில்தான், கடந்த மார்ச் 10-ம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சீன அதிபராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முறைப்படி பதவியேற்றிருக்கிறார் ஜி ஜின்பிங்.

இதன் மூலம் சீன தந்தை என அழைக்கப்படும் மாவோவுக்குப் பிறகு, இரண்டு முறைக்குமேல் அதிபராகவும் சக்தி வாய்ந்த தலைவராகவும் உருவெடுத்திருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.


மேலும் படிக்க `மூன்றாவது முறை சீன அதிபராகப் பதவியேற்ற ஜி ஜின்பின்!' - இனி வாழ்நாள் வரை அவர்தான் சீன அதிபரா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top