`என் தொழிலுக்குப் பண்ணுற துரோகமா நினைச்சேன்... அதனால பல வாய்ப்புகளை இழந்தேன்!' - நவீன்

0

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான `இதயத்தைத் திருடாதே' தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் நவீன். இவருக்கு `மக்கள் நாயகன்' என்கிற பட்டத்தை அவருடைய ரசிகர்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவருடன் உரையாடியதிலிருந்து...

சொந்தமா காஃபி ஷாப் ஆரம்பிச்சிருக்கீங்களே?

நவீன்

எனக்கு பிசினஸில் ஏதாவது பண்ணனும்னு ஆசை இருந்துச்சு. ரொம்ப ஜாலியா ஆரம்பிச்சதுதான் Kotta Coffee பிராண்ட். இப்ப பிசினஸும் நல்லா போயிட்டு இருக்கு.

கர்ப்பமாக இருக்கும்போதும் கண்மணி நியூஸ் வாசிக்கப் போயிருந்தாங்க.. நீங்க அவங்களுக்கு எந்த அளவுக்கு சப்போர்ட் ஆக இருக்கீங்க?

நவீன்

அவங்களுக்கு அவங்களுடைய ஒர்க் ரொம்பவே பிடிக்கும். அவங்களால போக முடியுங்கிற சூழலில் எல்லாம் அவங்க போயிடுவாங்க. முடியாத சூழலில் மட்டும்தான் ரெஸ்ட் எடுப்பாங்க. இப்ப வரைக்கும் அவங்க தான் எனக்கு சமைச்சுக் கொடுத்துட்டு இருக்காங்க. சீக்கிரமே அவங்களை மறுபடியும் அந்த ஒர்க்ல பார்க்கலாம். அவங்களும் ஆர்வமா அதுக்காக காத்துட்டு இருக்காங்க.

கண்மணிக்கு நடிப்புல ஆர்வம் இருக்கா?

நவீன்

அவங்களுக்கு நடிப்புல ஆர்வம் இல்லைங்க. `இதயத்தைத் திருடாதே' முடிஞ்சதும் என்னுடைய என்கேஜ்மென்ட் அப்ப டைரக்டர் என்கிட்ட உங்க மனைவியை வச்சு சேர்ந்து ஒரு புராஜெக்ட் பண்ணலாமான்னு கேட்டாரு. எனக்குத் தெரியாது நீங்க அவங்ககிட்டேயே கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டேன். அவங்க சம்மதம் தெரிவிக்கல. நிறைய புராஜக்ட், விளம்பரங்கள் எல்லாம் வந்தது. கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்களுக்கு நிறைய ஆஃபர் வந்திருக்கு. ஏன் நடிக்கலைன்னு கேட்டா, எனக்கு வராத விஷயத்துல நான் என்ன பண்றதுன்னு சொல்லுவாங்க. ஃபேம்னால தெரியாததை பண்ணினா நல்லா இருக்காது. இந்த வேலைக்காக திறமையான பலர் காத்துட்டு இருக்காங்க இந்த இடம் அவங்களுக்குப் போய் சேரணும்னு சொல்லுவாங்க. தெரியாத வேலையைப் பண்ணக் கூடாதுங்கிறதுல அவங்க ரொம்பவே உறுதியா இருக்காங்க.

கண்மணி எவ்வளவு தூரம் உங்களுக்கு சப்போர்ட் ஆக இருக்காங்க?

நவீன்

நானே தேடி லவ் பண்ணியிருந்தாலும் இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்குமான்னு தெரியல. என் அம்மாகிட்ட இருந்து எனக்குக் கிடைச்ச எல்லா விஷயங்களும் இவங்ககிட்ட இருந்தும் கிடைச்சிட்டு இருக்கு. அம்மா கொடுத்த அதே லவ்வை அவங்களும் கொடுக்குறாங்க. ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் எங்களுக்குள் லவ் அதிகமாகிட்டே தான் போகுது. அவங்களுக்கு டைரக்‌ஷன் நாலேஜ் இருக்கு. படம் பண்ணனும்னு அவங்களுக்கு ஆசை. பியூச்சர்ல ரெண்டு பேரும் சேர்ந்து கூட பண்ண வாய்ப்பு இருக்கு. நான் கூட புராஜெக்ட் இல்லாம இருக்கேனேன்னு கேட்டிருக்கேன். பணத்துக்காக எதுவும் பண்ண வேண்டாம். உங்க பேஷனுக்காக எவ்வளவு நாள்னாலும் வெயிட் பண்ணுங்க. சீக்கிரமே நல்ல புராஜெக்ட் கிடைக்கும்னு என்கரேஜ் பண்ணிட்டே இருப்பாங்க. ரெண்டு மாசம் கேப் விட்டதுக்கு பலர் கேட்பாங்க. இப்ப புராஜெக்ட்டிற்காக லுக் மாத்திட்டு இருக்கேன். எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு எனக்கு சப்போர்ட் ஆக இருக்காங்க.

நிறைய பட வாய்ப்புகளை இழந்திருக்கீங்களாமே?

நவீன்

`இதயத்தை திருடாதே' பண்ணும்போது மூணு படங்கள் வந்துச்சு. சீரியல் பண்ணிட்டு இருந்ததால அந்த வாய்ப்புகளை விட்டுட்டேன். அதுக்காக நான் இன்னைக்கு வரைக்கும் ஃபீல் பண்றேன். பத்து வருஷமா படம் பண்ணியிருக்கோம் ஆனா பெரிய அளவில் பெயர் கிடைக்கல. சீரியலில் ஹீரோவாக நடிக்கிறோம்.. மக்கள் மத்தியில் கொண்டாடப்படுறோம். என்னைக்கு வாய்ப்பு வருதோ அப்ப அதை கன்சிடர் பண்ணனும். தேதி பிரச்னை தான் அதைப் பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய பிரச்னை. நம்மளை நம்பி ஒரு புராஜக்ட் கொடுத்திருக்காங்கங்கிறப்ப அதை நாம விட்டுட்டுப் போறதுங்கிறதை நான் தப்பா நினைக்கிறேன். அதுக்கு நான் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். ரெண்டு சீரியல் பண்ணும்போது எல்லா சேனல்களில் இருந்தும் வாய்ப்பு வந்துச்சு. நான் நினைச்சிருந்தா பண்ணியிருக்கலாம். ஆனா, அப்படி பாதியிலேயே விட்டுட்டுப் போறதை நான் என் தொழிலுக்குப் பண்ணுற துரோகமாகத்தான் நினைக்கிறேன். அது முடிஞ்சதும் பண்ணலாங்கிறதுதான் என் எண்ணம். அதனாலேயே பல வாய்ப்புகள் கைவிட்டுப் போயிருக்கு.

அப்பாவும் மீடியா துறையைச் சேர்ந்தவராமே? 

நவீன்

அப்பா சென்னை டு கன்னியாகுமரி லோகேஷன் மேனேஜராக ஒர்க் பண்றார். முப்பது வருஷத்துக்கும் மேல சினிமாவுல இருக்கார். பல முறை ஷுட்டிங் ஸ்பார்ட்டிற்கு என்னை கூப்பிட்டிருக்கார். ஆனா, நான் போக மாட்டேன். ஆர்மியில் போகணும்னுதான் என் ஆசை. மீடியாவுக்குள் வருவேன்னு நானே நினைக்கல. கிட்டத்தட்ட 10 வருஷமா போராடி ஆடிஷன் எல்லாம் போய் போராடிதான் எனக்கான வாய்ப்பை பெற்றேன். அப்பாவுடைய தொடர்புகளைப் பயன்படுத்த நினைச்சிருந்தா எப்பவோ பண்ணியிருந்திருப்பேன். சொந்தமா சினிமாவுலயோ சீரியலிலயோ வரணும்னு நினைச்சேன்.. வந்தேன்!

சீரியல்களை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்களா?

நவீன்

சினிமாவுல எனக்கேற்ற மாதிரியான கேரக்டர் கிடைக்கல. கிட்டத்தட்ட பத்து சீரியலில் ரிஜெக்ட் ஆகியிருக்கேன். கலர்ஸ் தமிழில் ஒரு புரொடக்‌ஷன் கம்பெனியில் ரிஜெக்ட் ஆனேன்.. அதே கம்பெனியில் இன்னொரு புராஜெக்ட்டில் செலக்ட்டும் ஆனேன். சினிமா,சீரியல்னுலாம் இல்ல. எனக்கு எல்லா வாய்ப்பும் ஒண்ணுதான்! படம் பெயர் சொல்ல விரும்பல... உங்களுக்கு இந்த ரோல்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்புறமா அந்தக் கேரக்டரையே தூக்கிட்டோம்னு டைரக்டர் சொன்னாரு. ஆனா, இந்தக் கேரக்டரில் இவர் தான் நடிக்கப் போறார்னு வேறு ஒருத்தருடைய பெயர் சோசியல் மீடியாவில் எல்லாம் வந்துடுச்சு. நானும் பார்த்துட்டேன். அந்தக் கேரக்டருக்கு பதிலா இன்னொரு கேரக்டர் சொன்னாங்க. தேதி இல்லைன்னு நான் பண்ணலைன்னு சொல்லிட்டேன். அந்தப் படம் செம ஹிட். அதுல நடிச்சவங்க பெரிய இடத்துக்குப் போயிருக்காங்க. என் கைவிட்டுப் போன படங்கள் நிறையவே இருக்கு. ஒரு படத்துல நாம நடிச்சிருப்போம்... ஆனா, நம்மளை தூக்கியிருப்பாங்க. தூக்கிட்டோம்னு தகவல் கூட சொல்லியிருக்க மாட்டாங்க.. அது மாதிரி நிறைய சந்திச்சிருக்கேன்!

நவீன் நம்மிடையே அவருடைய பர்சனல், புரொபஷனல் சார்ந்த பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 


மேலும் படிக்க `என் தொழிலுக்குப் பண்ணுற துரோகமா நினைச்சேன்... அதனால பல வாய்ப்புகளை இழந்தேன்!' - நவீன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top