“கொடநாடு குற்றவாளியை இறைவன் தண்டிப்பான்” - ஓ.பி.எஸ் மாநாட்டில் வைத்திலிங்கம் ஆவேசம்

0

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக 51-வது ஆண்டு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று நடைபெற்றது.

 இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வைத்திலிங்கம் மாநாட்டில் பேசுகையில், “ஆயிரம் எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமமில்லை. இந்தக் கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. தொண்டர்களை மதிக்காதவன் அழிந்து போவான். நிச்சயமாக இதற்கு தர்மம் பதில் சொல்லும்.

ஓ.பி.எஸ் மாநாடு மேடை

மலை குலைந்தாலும் நிலை குலையாமல் மாண்போடு இருக்கின்ற அண்ணன் ஓபிஎஸ் அவர்கள், நாலு பக்கமும் இருந்து அம்புகள் வந்தாலும் தன்னுடைய புன்னகையால் அதை சிதறடிக்கக் கூடிய ஆற்றலும், அறிவும் பெற்றவர். பொறுமைக்கு எடுத்துக்காட்டானவர். 3 முறை தனக்கு கொடுத்த முதலமைச்சர் பதவியை திருப்பிக் கொடுத்தவர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ காலில் விழுந்து முதலமைச்சரானவர்.

சரஸ்வதி சபதம் படத்தில் கே.ஆர்.விஜயா யாசகம் பெறும் பெண்ணாக நடிப்பார். யானை மாலையிட்டு அவர் ராணியாவார். ராணி ஆனவுடன் திமிர் அதிகமாக இருக்கும். அதை அடக்குவார்கள். அதேபோல எடப்பாடி திமிரை தொண்டர்களாகிய நீங்கள் தான் அடக்க வேண்டும். புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆருக்கும், புரட்சித் தலைவி அம்மாவுக்கும் யார் ஒருவர் துரோகம் செய்தாலும், கழகத்தின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் நிச்சயமாக அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

திருச்சி ஓபிஎஸ் மாநாடு

புரட்சித் தலைவர் வகுத்த விதியை, அம்மா கட்டிக்காத்த விதியை தூக்கிப்போட்டு காலில் மிதித்துள்ளனர். அம்மா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்பதை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தண்டனை கொடுத்தாக வேண்டும். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார். கொடநாடு கொள்ளை நடந்த நாள் 2017 ஏப்ரல் 24-ம் தேதியான இன்று தான். அந்த நாளில் தான் இந்த மாநாடு நடக்கிறது. அந்தக் குற்றவாளி யாராக இருந்தாலும், அவன் எவ்வளவு பெரியக் கொம்பனாக இருந்தாலும் இறைவன் தண்டிப்பான். ஓபிஎஸ் தான் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர். தொண்டர்களாகிய நீங்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும்” என்றார்.     


மேலும் படிக்க “கொடநாடு குற்றவாளியை இறைவன் தண்டிப்பான்” - ஓ.பி.எஸ் மாநாட்டில் வைத்திலிங்கம் ஆவேசம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top