Doctor Vikatan: மவுனவிரதம் இருப்பது உண்மையிலேயே ஆரோக்கியமானதா... எத்தனை நாள்களுக்கொரு முறை மவுனவிரதம் இருக்கலாம்? குரலுக்கு ஓய்வு கொடுக்கவேண்டியது எந்த அளவுக்கு அவசியம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்

மவுனவிரதம் என்ற விஷயத்தை நவீன மருத்துவர்கள் யாரும் அறிவுறுத்துவதில்லை. யாருக்காவது குரல் நாண் தொடர்பான பிரச்னை இருந்து, அதற்காக ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் அந்தக் காயம் ஆறும்வரை குரல்நாணுக்கு ஓய்வு கொடுக்கச் சொல்வோம்.
அதே போல தொண்டைப் பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தாலும் அந்த நேரத்தில் குரலுக்கு ஓய்வு கொடுக்கச் சொல்வோம்.
இது போன்ற தருணங்களில் குரல் நாணுக்கு வேலை கொடுக்கப்பட்டால் அந்தப் பிரச்னைகள் மேலும் தீவிரமாக வாய்ப்பு உண்டு அல்லது ஏற்கெனவே ஏற்பட்ட பாதிப்பானது இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கவும் கூடும் என்பதால்தான் இந்த அட்வைஸ். இந்த இரண்டு நிலைகள் தாண்டி, வேறு எதற்கும் குரல் நாணுக்கு ஓய்வு கொடுக்கத் தேவையில்லை.

மவுனவிரதம் இருப்பது எந்த வகையிலும் குரல் நாணின் ஆரோக்கியத்துக்கு உதவுவதில்லை. மவுனவிரதம் இருப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியமும் இல்லை. அதையும் தாண்டி மன அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியதும்கூட.
எனவே குரலுக்கு ஓய்வு என்ற பார்வையில் மவுனவிரதத்தை நவீன மருத்துவம் ஊக்கப்படுத்துவதில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: மவுனவிரதம் இருப்பது உண்மையில் ஆரோக்கியமானதா?