100-வது `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலியில் தன்னுடைய 100-வது `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 2014-ல் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, அந்த ஆண்டு ஆக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி தன்னுடைய முதல் `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றினார். பிரதமர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். தொழில்நுட்பம், சமூக மேம்பாடு, சாதனையாளர்கள் குறித்தப் பேச்சு என ஆக்கபூர்வமான உரையாடலை பிரதமர் இந்த நிகழ்ச்சியின் மூலம் நிகழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்றைய தினம் தன்னுடைய 100-வது `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பிரதமரின் இந்த உரை நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று இந்திய தூதரக தெரிவித்திருக்கிறது.
அதே போல, இந்தியா முழுவதும் பிரதமரின் இந்த 100-வது `மன் கி பாத்' உரையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக, பா.ஜ.க-வினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். கட்சி அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கூடும் இடங்களில் எல்.இ.டி திரைகள் மூலம் பிரதமர் உரையை ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கின்றனர். அந்த வகையில், சென்னை குப்பம் பகுதியிலும் பா.ஜ.க-வினர் இத்தகையை ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர்.
மேலும் படிக்க Tamil News Live Today: 100-வது `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி!