எடப்பாடிக்கு எதிராக பன்னீரும் வேட்பாளர் அறிவிப்பு!
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில். பா.ஜ.க கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க விருப்பம் தெரிவித்தது. ஆனால், பா.ஜ.க அறிவித்த இறுதி வேட்பாளர்கள் பட்டியலில், அ.தி.மு.க-வுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் தனித்து போட்டியிடுவது என அ.தி.மு.க தரப்பு முடிவெடுத்தது. எனவே, கர்நாடகா புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில், கர்நாடக மாநில அ.தி.மு.க அவைத் தலைவரான டி.அன்பரசன் போட்டியிடுவார் என அந்தத் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தற்போது அதே தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கர்நாடக மாநில அ.தி.மு.க மாணவரணி செயலாளர் எம்.நெடுஞ்செழியன் போட்டிடுவார் என அறிவித்திருக்கிறார். இதே தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரும் களத்தில் இருப்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க Tamil News Live Today: கர்நாடகாவில் கவனம் பெறும் புலிகேசி நகர்... எடப்பாடிக்கு எதிராக பன்னீரும் வேட்பாளர் அறிவிப்பு!