2,000 ரூபாய் நோட்டு விவகாரம்; சாமானிய மக்களுக்கு பாதிப்பா? - அரசியல் கட்சியினர் சொல்வதென்ன?

0

இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்துவந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாக ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) அறிவித்திருக்கிறது. அதே சமயம், 2,000 ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும், அதற்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி மிகத்தீவிரமாக எழுந்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 24(1)-ன் கீழ் 2016 நவம்பரில் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் முதன்மை நோக்கம் அப்போது புழக்கத்திலிருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டப் பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதாகும். மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறியது. அதனால், 2018-19-ல், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

2,000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் சுமார் 89% 2017 மார்ச் மாதத்துக்கு முன்பு வெளியிடப்பட்டன. புழக்கத்திலுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, 2018 மார்ச் 31 அன்று ரூ.6.73 லட்சம் கோடியாக (புழக்கத்திலுள்ள நோட்டுகளில் 37.3%) இருந்த நிலையில், 2023 மார்ச் 31 அன்று ரூ.3.62 லட்சம் கோடியாக அது குறைந்திருக்கிறது. இது புழக்கத்திலுள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே ஆகும். இந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் பொதுவாக பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதில்லை. மேலும், பொதுமக்களின் நாணயத் தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது. எனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் க்ளீன் நோட்டு கொள்கையின்படி, ரூ.2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெற முடிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது. இதன்மூலம், பொதுமக்கள் மத்தியில் மிகக்குறைந்த அளவிலேயே 2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால், சாமானிய மக்களுக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை

மேலும், ``வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். பொதுமக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிக் கிளையிலும் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம். வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது தற்போதைய அறிவுறுத்தல்கள் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு உட்பட்டது. வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, 2023 மே 23 முதல் எந்த வங்கியிலும் ரூ.20,000/- வரையிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

2,000 ரூபாய் நோட்டு

பொதுமக்களுக்கு போதுமான அவகாசம் வழங்கும் வகையில், அனைத்து வங்கிகளும் 2023 செப்டம்பர் 30 வரை ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் அல்லது மற்ற நோட்டுகளாக மாற்றும் வசதியை வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு தனி வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 2,000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000/- வரை மாற்றுவதற்கான வசதி 2023 மே 23 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களும் வழங்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறது. முக்கியமாக, 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரை அதிக காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதால், கடந்த காலங்களில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் சந்தித்த கடுமையான பாதிப்புகள், உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதங்கள் இந்தமுறை நிச்சயமாக நடைபெறாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். மேலும், சட்டவிரோதமாகப் பணப்பதுக்கலில் ஈடுபட்டவர்களுக்குத்தான் பாதிப்புகள் உண்டாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனமும் வரவேற்பும் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், ``இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, சுக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஏராளம். அதாவது ஊழல், லஞ்சம், போதைப்பொருள்கள் கடத்தல், ஹவாலா மோசடி போன்ற குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து வைத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பாதகமே. அதே சமயம் இந்த அறிவிப்பால் நியாயமாக, நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மொத்தத்தில் இந்த அறிவிப்பானது பண ஆசையில் தவறாக, குறுக்கு வழியில் செயல்பட நினைப்பவர்களுக்கு பொருத்தமான ஒன்று. குறிப்பாக சாமானியர்களும், நல்லவர்களும் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படமாட்டார்கள்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜி.கே.வாசன்

அதேபோல வி.கே.சசிகலா, ``ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நிர்ணயம் செய்திருப்பதும் மக்களுக்குப் பயனளிக்கக்கூடியது. ஆனால் அதேசமயம் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை, எவ்வாறு திரும்பப் பெறுவது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும்போதும், வங்கி அல்லாத மற்ற இடங்களில் குறிப்பாக டாஸ்மாக், கோ ஆபரேட்டிவ் வங்கிகள், முத்திரை தாள் விற்பனை போன்றவற்றில் எந்த அளவுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை ஒரு நபரிடமிருந்து பெற முடியும் என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வராததால், இதுபோன்ற இடங்களில் எல்லாம் அதிகாரவர்க்கத்தினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. எனவே, முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் வகையில், வங்கி அல்லாத பிற இடங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்குத் தேவையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்" என மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சசிகலா

அதேபோல ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ``2,000 ரூபாய் நோட்டுகளைத் தடைசெய்யும் முடிவு நிச்சயமாக நல்ல அறிகுறி. 2,000 ரூபாய் நோட்டுகள் ரத்துசெய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்து தேர்தலில் வெற்றி பெற அரசியல்வாதிகள் முயன்று வருகின்றனர். இதில் ரூ.2,000 நோட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன" எனத் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``பிரதமர் 2,000 ரூபாய் நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்று முதலில் கூறினார். இப்போது 2,000 நோட்டுகளை தடைசெய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். அதனால்தான் நாங்கள் சொல்கிறோம், பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவருக்குப் புரியவில்லை. பொதுமக்கள் அவதிப்பட வேண்டியிருக்கிறது" என விமர்சனம் செய்திருக்கிறார்.

கெஜ்ரிவால் - ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், ``500 சந்தேகங்கள், 1,000 மர்மங்கள், 2,000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!" என 2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.


மேலும் படிக்க 2,000 ரூபாய் நோட்டு விவகாரம்; சாமானிய மக்களுக்கு பாதிப்பா? - அரசியல் கட்சியினர் சொல்வதென்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top