5 மாநிலங்கள்... தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்... `கை’கொடுக்குமா கார்கேவின் அடுத்த மூவ்?

0

நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்தே அரசியல் களம் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்கு வரிசையாக திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கவிருப்பதே காரணம்.

தேர்தல்

முதலில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியை பிடித்தன. தொடர்ந்து நடந்த கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை ருசித்தது. இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதையடுத்து மிசோரம், சட்டீஷ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது.

இதில் மிசோராமில் முதல்வர் ஜோரம் தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியும், சட்டீஷ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும், மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சியும், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியும், முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி தெலங்கானாவிலும் நடக்கிறது.

காங்கிரஸ்

இங்கு வெற்றி பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. இதையடுத்து அந்த மாநிலங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் சம்மந்தப்பட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் சவாலகள், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர். "கர்நாடகாவை தொடர்ந்து நடக்கும் 5 மாநில தேர்தல்களில் எப்படியும் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்பதில் கார்கே உறுதியாக இருக்கிறார். இதற்காக மிசோரம், சட்டீஷ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இருக்கும் அவரின் இல்லத்தில் கடந்த 23-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

கர்நாடக தேர்தல்

இதில் மக்களிடத்தில் என்ன மாதிரியான முறையில் பிரசாரங்களை கொண்டு செல்வது, ஏற்கெனவே பொறுப்பில் இருக்கும் தலைவர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது?, புதிதாக யாருக்கு சீட் வழங்கலாம்?, அதேபோல் மாநில கட்சிகளின் ஆதரவு காங்கிரஸுக்கு எப்படி இருக்கிறது?, புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர முடியுமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் சச்சின் பைலட் - கெலாட் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இது நீடிக்கும் பட்சத்தில் தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த தேர்தலில் ராகுல் காந்தி தென் இந்தியா முழுவதும் கையில் எடுத்துக்கொண்டார். உ.பி தேர்தலை பிரியங்கா கவனித்து வந்தார்.

அசோக் கெலாட், ராகுல் காந்தி, சச்சின் பைலட்

இந்தமுறை அதேபோல் சம்மந்தப்பட்ட மாநிலங்களை பிரித்து இருவருக்கும் வழங்கலாமா? அல்லது கே.சி.வேணுகோபாலுக்கே அந்த பொறுப்பை வழங்கலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும் எந்த விஷயத்திலும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை.

கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை நல்ல பலனை கொடுத்தது. இதேபோன்ற தாக்கம் சம்மந்தப்பட்ட மாநிலங்களில் இருக்குமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது" என்றனர். காங்கிரஸின் இந்த வியூகம் கைகொடுக்குமா?

ராகுல் யாத்திரை

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "மிசோரமில் தற்போது மாநில கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்தியபிரதேசத்தில் 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்றது. பிறகு பாஜக அதனை கவிழ்த்து ஆட்சியை பிடித்தது. தற்போது பாஜகவில் இருந்து பலர் விலகி காங்கிரஸில் இணைந்திருக்கிறார்கள்.

மேலும் இங்கு காங்கிரஸூக்கு தற்போதும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. தெலங்கனாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என அவர்கள் நினைக்கலாம். அதற்கு தேர்தலை சந்தித்தால் வாக்கு பிரித்து பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. அவர்களின் நோக்கமே பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான வேட்பாளர் இருக்க வேண்டும் என்பது தான்.

ப்ரியன்

எதிர்க்கட்சிகளும் அதை தான் நினைக்கிறார்கள். ராஜஸ்தான், சத்தீஷ்காரில் உட்கட்சி பிரச்னை இருக்கிறது. அதையும் மீறி வெற்றி பெற்று விடுவார்கள் என்று தான் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக வெற்றியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. ராஜஸ்தானில் சச்சின் பைலட் வெளியேறினால் கூட பெரிய பாதிப்பு இருக்காது என்ற தகவல்கள் தான் தற்போது வெளியாகியிருக்கிறது" என்றார்.


மேலும் படிக்க 5 மாநிலங்கள்... தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்... `கை’கொடுக்குமா கார்கேவின் அடுத்த மூவ்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top