கர்நாடகா: ஆட்சி அமைக்க முட்டி போதும் காங்கிரஸ், பாஜக... தொங்கு சட்டசபை வந்தால் யாருக்கு சாதகம்?!

0

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் 73 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு, கடந்த 70 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், இவ்வளவு அதிகமான சதவிகிதத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற தேர்தல் இதுதான். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று வாக்குப்பதிவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை தெரிவிக்கின்றன.

மல்லிகார்ஜுன கார்கே

பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் கூறிவந்தாலும், அங்கு நடத்தப்பட்ட பத்து கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்று ஏழு கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெறும் என்கிற நம்பிக்கையில் அக்கட்சி இருக்கும் நிலையில், “கர்நாடகாவில் தற்போது இருக்கும் பா.ஜ.க ஆட்சி மாற வேண்டும்... காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். 224 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 - 114 இடங்கள் வேண்டும். நாங்கள் 130 இடங்களில் வெற்றிபெறுவோம்” என்று கூறியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் டைம்ஸ் நவ் இ.டி.ஜி ஆகிய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்றும், இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் மற்றும் ஜீ நியூஸ் - மேட்ரிஸ் கருத்துக்கணிப்பின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு 113 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றன. நியூஸ் நேசன் - சி.ஜி.எஸ் கருத்துக்கணிப்பின் முடிவுகள் பா.ஜ.க வெற்றிபெறும் என்றும், சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க-வுக்கு 117 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

பசவராஜ் பொம்மை

நியூஸ் நேசன் - சி.ஜி.எஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க-வுக்கு 114 இடங்களுக்கு மேல் கிடைக்கும், காங்கிரஸ் கட்சிக்கு 86 இடங்கள் கிடைக்கும், ஜே.டி.எஸ் 21 இடங்களைப் பெறும் என்று தெரிவிக்கின்றன. தி சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க-வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும், 94 முதல் 117 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு 91 - 106 இடங்கள் பெறும் என்றும், ஜே.டி.எஸ் 12 - 24 இடங்களைப் பெறும் என்றும் அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா டுடே - ஆக்சிஸ் இந்தியா கருத்துக்கணிப்பின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு 122 - 140 இடங்கள் கிடைக்கும், பா.ஜ.க-வுக்கு 62 முதல் 80 இடங்கள் கிடைக்கும் என்கின்றன. டைம்ஸ் நவ் - இ.டி.ஜி கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சி 113 இடங்களைப் பிடிக்கும், பா.ஜ.க-வுக்கு 85 இடங்கள் கிடைக்கும், ஜே.டி.எஸ் 32 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

நியூஸ் 24 - டுடே’ஸ் சாணக்கியா கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு 120 இடங்கள் கிடைக்கும், பா.ஜ.க-வுக்கு 92 இடங்கள் கிடைக்கும், ஜே.டி.எஸ் 12 இடங்களைப் பெறும் என்றும் தெரிவிக்கின்றன. தி ரிபப்ளிக் டி.வி - பி மார்க் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு 85 - 100 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 108 இடங்கள், ஜே.டி.எஸ்-க்கு 24 - 32 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன.

குமாரசாமி

தி டி.வி 9 - பாரத்வன்ஷ் - போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க-வுக்கு 88-98 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 99-109 இடங்கள், ஜே.டி.எஸ்-ஸுக்கு 21 - 26 கிடைக்கும் என் தெரிவிக்கின்றன. தி ஜீ நியூஸ் - மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க-வுக்கு 79 - 94 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 103 - 118 இடங்கள், ஜே.டி.எஸ்-ஸுக்கு 25 - 33 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன.

ஏபீபி நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க-வுக்கு 83 - 95 இடங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 100 - 112 இடங்கள், ஜே.டி.எஸ்-ஸுக்கு 21 - 29 இடங்கள் கிடைக்கும் என்றும், இந்தியா டி - சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு 110 - 120 இடங்கள், பா.ஜ.க-வுக்கு 80 - 90 இடங்கள், ஜே.டி.எஸ்-ஸுக்கு 21 - 29 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி, காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டால் ஒன்று பிரச்னை இல்லை. ஒருவேளை, சில கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் கூறுவதுபோல, தொங்கு சட்டமன்றம் வந்துவிட்டால், எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் குறித்து களநிலவரங்களை நேரடியாக ஆய்வுசெய்து செய்திக்கட்டுரைகள் எழுதுவதற்காக கர்நாடகா சென்றிருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் இது பற்றி பேசினோம். அப்போது, “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்குத்தான் அதிகமான வாய்ப்பு இருக்கிறது. நான் பார்த்தவரையில் காங்கிரஸ் கட்சி உறுதியாக ஆட்சியமைக்கும். தொங்கு சட்டமன்றம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரேயொரு பிரச்னை என்னவென்றால், வழக்கம்போல மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை இழுப்பதற்கு பா.ஜ.க தயாராக இருக்கிறது. அதில், எந்தளவுக்கு பா.ஜ.க வெற்றிபெறும் என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சியமைக்கும்” என்றார்.

பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களும், ``காங்கிரஸ் தனிபெரும்பான்மை தேவைக்கும்(113) அதிகமான இடங்களை கைபற்றினால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். தனிப் பெரும் கட்சியாக வந்தும், ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை தொடமுடியாமல் போனால், பாஜக அனைத்து வழிகளிலும் ஆட்சி அமைக்க முயற்சி செய்யும். பொதுவாக ஆட்சி அமைப்பதில், பாஜக தேர்தலுக்கு முந்தைய வழிகள், தேர்தலுக்கு பிந்தைய வழிகள் என இரண்டு வழிகளை கையாளும். அதனால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் எனில், அது தனிப்பெரும்பான்மை இடங்களை கைபற்ற வேண்டும். ஆனால், தொங்கு சட்டசபை ஏற்பட்டால், பாஜகவுக்கு தான் வாய்ப்பாக அமையும்” என்றார்கள்.


மேலும் படிக்க கர்நாடகா: ஆட்சி அமைக்க முட்டி போதும் காங்கிரஸ், பாஜக... தொங்கு சட்டசபை வந்தால் யாருக்கு சாதகம்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top