விழுப்புரம்: இரண்டரை வயது குழந்தையை கொன்ற சித்தி - நீதிமன்றம் அதிரடி

0

விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷிமிரலுதீன். 2019-ம் ஆண்டு இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் தாய் இறந்துள்ளார். எனவே, பாத்திமா தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து, அப்சனா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் ஷிமிரலுதீன். இந்த நிலையில், சிறுமி பாத்திமாவுக்கு நீரிழிவு நோய் இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனை அனுசரித்துக் கொள்ள முடியாத அப்சனா, குழந்தையை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாத்திமா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

விழுப்புரம் நீதிமன்றம்

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பாத்திமாவின் மாமா முகமது ஷாகிர் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி  வழக்கு பதிவு செய்த போலீஸார், உடற்கூறாய்வு முடிவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது... சிறுமி பாத்திமாவின் சித்தி அப்சனாவே, சிறுமியின் நெஞ்சை காலால் அழுத்தி கொடூரமாக கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து அப்சனாவை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று (26th) அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி ஹெர்மிஸ். இரண்டரை வயது குழந்தையை கொலை செய்த அப்சனா-வுக்கு, தனி சட்டப்பிரிவுகளின் படி 4 ஆண்டு சிறை தண்டனை உட்பட ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டதோடு, 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.


மேலும் படிக்க விழுப்புரம்: இரண்டரை வயது குழந்தையை கொன்ற சித்தி - நீதிமன்றம் அதிரடி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top