Doctor Vikatan: சிலருக்கு குரலில் திடீரென மாற்றம் ஏற்படுவது ஏன்? ஆண் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதில் குரல் உடைந்து மாறும் செயல் நடக்காமல் போக வாய்ப்பு உண்டா? குரல் மாற்றத்துக்கு சிகிச்சைகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

ஆண் குழந்தைகளுக்கு 10-12 வயதுக்குப் பிறகு மழலைக்குரல் மாறி, குரல் உடைவது நிகழும். அரிதாக, சிலருக்கு குரல் மாறா மலே இருக்கும். ஸ்பீச் தெரபி மூலம் இதைச் சரி செய்யலாம். ஹார்மோன் பிரச்னைகள் காரணமாகவும் இப்படி சிலருக்கு குரல் மாறாமல் இருக்கும். தேவையைப் பொறுத்து சிலருக்கு அறுவை சிகிச்சைகூட தேவைப்படலாம்.
பெண்களுக்கு கரகரப்பான குரல் ஏற்பட ஹார்மோன் கோளாறு உள்பட பல காரணங்கள் இருக்கலாம். குரலுக்கு அதிக வேலை கொடுத்தாலும் அப்படி ஆகலாம். மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள் போல குரலுக்கு அதிக வேலை கொடுப்பவர்களுக்கு இப்படி வரும். தொண்டையில் தொற்று ஏற்படும்போது குரல் மாறுவதைப் பார்த்திருப்போம். சில நேரங்களில் குரல்வளையில் கட்டிகள் வந்து, அதனாலும் குரல் மாறலாம்.

அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். பிரச்னையை உடனே கண்டறிந்து சீக்கிரம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையான தீர்வு பெறலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: திடீரென ஏற்படும் குரல் மாற்றம்... குணப்படுத்த சிகிச்சைகள் உண்டா?