நடிகர் மனோபாலா உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வந்தவர் மனோபாலா. ஒரு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார், சின்னத்திரையிலும் நெடுந்தொடர்களை இயக்கி மக்களின் பேரன்பை பெற்றவர். மனோபாலா கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நேற்று காலமானார். மறைந்த மனோபாலாவின் உடலுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த நடிகர் மனோ பாலாவின் உடல் திரையுலக நண்பர்கள் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் இன்று காலை 10 மணி அளவில் வளசரவாக்கம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க Tamil News Live Today: நடிகர் மனோபாலா உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி - இன்று காலை இறுதிச் சடங்கு