இங்கிலாந்து மன்னராக இன்று முடி சூடப் போகும் மூன்றாம் சார்லஸ்!
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற நிலையில் அவரது மறைவு உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரின் மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். மன்னராகப் சார்லஸின் முடி சூடும் விழா இன்று லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறவுள்ளது. சார்லஸ்ஸை அழைத்துச் செல்ல 700 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசன சாரட் வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது.

சார்லஸ்க்கு புனித எட்வர்டின் கிரீடம் அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கமிலா இங்கிலாந்து இராணியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். உலகமே எதிர்பாக்கும் இந்த விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
திமுக இரண்டாண்டு ஆட்சி எப்படி?! - மினி சர்வே
மேலும் படிக்க Tamil News Live Today: இங்கிலாந்து மன்னராக இன்று முடி சூடப் போகிறார் மூன்றாம் சார்லஸ்! - களைகட்டும் கொண்டாட்டங்கள்!