மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது!
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான `நீட் தேர்வு' இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 18,72,000 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதவிருக்கின்றனர். 499 மையங்களில் நடைபெறவிருக்கும் இந்தத் தேர்வு, மதியம் 2 மணிக்குத் தொடங்கி, மாலை 5:30 மணி வரை நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஆங்கிலம், இந்தி, தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வு தொடர்பான விரிவான தகவல்களை இந்த லிங்கைக் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்... https://neet.nta.nic.in/
மேலும் படிக்க Tamil News Live Today: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது!