கருணாநிதி100: கருணாநிதியிடம் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியவை!

0
இன்று கலைஞர் நூற்றாண்டு தொடங்குகிறது. வாழ்வாங்கு வாழ்ந்த, மிகச்சில இந்திய அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

அதனாலேயே இந்திய விடுதலைப்போராட்டம், சுயமரியாதை இயக்கம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், திராவிடநாடு கோரிக்கை, ஈழப்போராட்டம், எமெர்ஜென்சி, இந்துத்துவ அரசியல் எழுச்சி, தலித், முஸ்லீம் போன்ற அடையாள அரசியல் அடிப்படையிலான இயக்கங்கள், உலகமயமாக்கல், நவீனத்தொழில்நுட்பம் என ஏராளமான மாற்றங்களைத் தன் கண்முன் கண்டவர் கலைஞர். அதேபோல் அவர் எதிர்கொண்ட களங்களும் எதிரிகளும்கூட ஏராளம். ஒரு நீண்ட வரலாற்றின் சாட்சியமாக இருந்த கலைஞர், அந்த வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒருவராகவும் வரலாற்றின் ஒருபகுதியாகவும் மாறிப்போனவர். அதனால்தான் கலைஞரைப் பற்றிப் பேசுவது வரலாற்றைப் பற்றிப் பேசுவதாகவும் கலைஞரை அறிந்துகொள்வது வரலாற்றை அறிந்துகொள்வதாகவும் இருக்கிறது.  

கலைஞர் கருணாநிதி

கலைஞர் என்னும் மனிதரை நாம் எப்படி புரிந்துகொள்ளலாம்? ஓர் எழுத்தாளராக, திரைப்படம் என்னும் மாபெரும் செல்வாக்கு பெற்ற ஊடகத்தில் மகத்தான தாக்கம் செலுத்திய படைப்பாளியாக, இதழியலாளராக, சிந்தனையாளராக, ஆட்சியாளராக, அரசியல் தலைவராக.... என்று சொல்லிக்கொண்டே போகலாம். அடையாளங்களுக்குள் அடங்காததே அவர் அடையாளம். தான் வாழும் காலத்தில் இத்தனைத் தளங்களிலும் இயங்கி எல்லாத் தளங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர் என்றால் அது கலைஞர் மட்டுமே.
கலைஞரின் எழுத்து குறித்தோ அரசியல் செயற்பாடுகள் குறித்தோ ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் நியாயங்களும் இருக்கின்றன; சாய்வுடன்கூடிய காழ்ப்புகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி நூற்றாண்டு காணும் கலைஞர் என்னும் ஆளுமையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?


முதலாவதாகக் கலைஞரின் மொழியை எடுத்துக்கொள்வோம். அவர் தன் வாழ்நாள் முழுதும் மொழியை நேசித்தவராக, மொழியை ரசித்து ரசித்து லாவகமாகக் கையாண்டவராக, தனக்குச் சோதனைகள் ஏற்பட்டபோதெல்லாம் மொழியையே அடைக்கலமாகவும் அருமருந்தாகவும் நினைத்தவராக இருந்தார். மொழியைக் கழற்றிவிட்டால் அங்கே கலைஞரில்லை. சிறுகதை, நாவல், வசன கவிதை, திரைப்பட வசனம், திரைப்படப் பாடல்கள், மேடைப்பேச்சு, அறிக்கைகள், புத்தகங்கள், உடன்பிறப்புக்குக் கடிதம், கேள்வி - பதில் என்று இப்போதும் தன் மொழியின் வழியே வாழ்பவராக நிலைத்திருப்பவர் கலைஞர்.

இன்றைய நவீன எழுத்தாளர்களின் அளவுகோலின்படி பார்த்தால் கலைஞரின் மொழி நவீனமானதில்லை. ஆனால் கலைஞரின் மொழி நவீனத்துவச் சிந்தனைகள் கொண்டது. அவர் எழுதிய காலத்துக்கு முந்தைய காலத்தைவிட வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் கலைஞரின் மொழிநடை நவீனமானது என்றால் இன்றைய பல நவீன எழுத்தாளர்களைவிடவும் நவீனத்துவச் சிந்தனைகள் ௐகொண்டது கலைஞரின் மொழி.

பெரியார், கலைஞர் கருணாநிதி

`தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதொழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்னும் திருக்குறளுக்குப் பலரும் உரை எழுதியுள்ளனர். ஆனால் பெரும்பாலும் `தெய்வத்தைக்கூட தொழாமல் கணவனைத் தொழக்கூடிய ஒரு பத்தினிப்பெண், பெய் என்று சொன்னால் மழை பெய்யும்' என்றுதான் உரை எழுதியுள்ளனர். பாவேந்தர் பாரதிதாசன்கூட இந்தக் குறளை அடிப்படையாக வைத்து ஒரு கதைப்பாடலை எழுதியிருப்பார். அதிலும்கூட, `பெய்யென பெய்யும் மழை' என்பதை, `தலைவி சொன்னதும் தலைவன், இல்லாதவர்களுக்கு ஈயும் கொடைமழை' என்றே உருவகித்திருப்பாரே தவிர, பத்தினிப்பெண்ணுக்கான வரையறையை மாற்றவில்லை. ஆனால் கலைஞர் தன் திருக்குறள் உரையில், 'இயற்கையாக, சுயவிருப்பத்துடன் சுதந்திரமாகப் பெய்யாமல், ஒருவர் பெய் என்று சொன்னவுடன் பெய்யும் மழை எப்படி அடிமைத்தனம் நிரம்பியதோ அதேபோல்தான் கடவுளைக்கூட தொழாமல் கணவனைத் தொழும் பெண்ணும் அடிமைத்தனம் நிரம்பியவள்' என்ற பொருளில் உரை எழுதி, நவீனச் சிந்தனையை நிறுவினார். அவருடைய 'குறளோவியம்' முழுக்கவே இத்தகைய நவீனச் சிந்தனையைக் காணலாம்.

"ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"
என்னும் குறளுக்கு 'ஒருபிறப்பில் கற்ற கல்வி அவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும்' என்றுதான் எல்லோரும் உரை எழுதினார்கள். ஆனால் கலைஞர் மட்டும்தான் 'ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்' என்று உரை எழுதினார். வைதீகநோக்கில் இருந்து எழுதப்பட்ட உரைகளுக்கு மாற்றாக சமூகநீதி உள்ளடக்கத்தை முன்வைத்தார். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முதல் தலைமுறையாகக் கற்கவரும் ஒருவருக்கு வழங்கப்படும் கல்வி எந்தளவுக்கு அவர் சமூகத்தின் வாழ்க்கையை மாற்றும் என்பதை உணர்ந்ததாலேயே அவர் உரை எழுதியதுடன் மட்டும் நிற்கவில்லை; முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான மக்கள்நலத் திட்டங்களைத் தொடர்ந்து தீட்டினார்.

கருணாநிதி

நாடகத்திலும் திரைப்படங்களிலும் கலைஞர் பயன்படுத்திய மொழிநடையை இன்று காலம் தாண்டிப்போய்விட்டது. மேடை நாடகங்கள் என்பது முற்றிலும் அருகிவிட்ட காலமிது. இன்னொருபுறம் 'திரைப்படம் என்பது முதன்மையாகக் காட்சி ஊடகம்' என்னும் நிலையில் கலைஞர்பாணியிலான வசனங்களுக்குத் தேவையில்லை. ஆனால் நாடகம், திரைப்படம் என்னும் ஊடகத்தில் ஓர் அரசியல் கலைச்செயற்பாட்டாளராகக் கலைஞர் நடத்திய இடையீடு வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது. அதனால்தான் 'பராசக்தி' இன்றளவும் நினைவுகூரப்பட்டு விவாதிக்கப்படுகிறது. இன்றைய அரசியல் சினிமாக்களுக்கான முன்னோடித் தடங்களில் கலைஞரின் பாதச்சுவடு அழுந்தப்பதிந்திருக்கிறது.
அயோத்திதாசர் சிந்தனைகளை முன்வைத்தும் சனாதன எதிர்ப்பின்பொருட்டும் தமிழில் பௌத்த, சமணச்சிந்தனைகள் குறித்து தமிழ் அறிவுசூழலில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் குறளோவியம்’, 'வள்ளுவர் கோட்டம்', ‘பூம்புகார்’, ‘கண்ணகி சிலை’, ‘மந்திரிகுமாரி’யில் குண்டலகேசி பாத்திரம் என்று கலைஞர் தமிழ்ப்பொதுவெளியில் கட்டியெழுப்பிய அடையாளங்கள் அவைதீக மரபான பௌத்தம், சமணம் சார்ந்தவையாக இருந்தன.

முற்றுமுழுதாகத் தமிழ்வழியாகவே இயங்கிய கலைஞர் இன்று இந்தியளவிலும் நினைவுகூரப்படும் தேவையிருக்கிறது. ஏனெனில் பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை, பன்மைத்துவம் ஆகியவற்றை முன்வைத்த திராவிட இயக்கத்தின் கருத்தியல் விழுமியங்கள் இன்று இந்திய அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.
'திராவிடநாடு' கோரிக்கையைக் கைவிட்டபிறகு 'மாநிலச்சுயாட்சி' என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்த அண்ணா, இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்பதையும் இந்திய ஆட்சியமைப்பில் எல்லா மாநிலங்களுக்கும் சமபங்கு இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். ஓராண்டு மட்டும் ஆண்டுவிட்டு அண்ணா மறைந்தபிறகு தி.மு.க.வின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் கலைஞர். ஆட்சிக்கலைப்புகள், எமெர்ஜென்சி போன்ற பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் தொடர்ந்து அவர் மாநில உரிமைகளை வலியுறுத்திவந்தார். தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டிய சூழல் வந்தபோது எல்லா மொழிகளும் மாநிலங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கலைஞர் வலியுறுத்தினார். இன்று அந்தக் குரல்தான் பினாரயி விஜயனின் குரலாக, மம்தா பானர்ஜியின் குரலாக, கெஜ்ரிவாலின் குரலாக ஒலிக்கிறது.

ஒரு தமிழ்க்குரல் இன்று பலமொழிகளில் ஒலிக்கிறது. அதுவும் பன்மைத்துவத்தை வலியுறுத்தி ஒலிக்கிறது.

திராவிட இயக்கத்தின் அடித்தளம் சமூகநீதி. கலைஞர் தேசிய அரசியலில் பங்கெடுத்தபோது தமிழகத்துச் சமூகநீதியை இந்தியளவில் விரிவுபடுத்துவதற்கு முயன்றார். வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் அமலாக்கத்துக்குத் துணைநின்றார்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான சமூகநீதி என்பதும் வெறுமனே வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது என்றளவில் மட்டும் புரிந்துகொள்ளக்கூடாது. பல்வேறு சமூகப்பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு நிர்வாகத்தில் பங்கேற்பதுதான் சமூகநீதி என்ற புரிதல் அவசியம். பல்வேறு சமூகப்பின்னணியில் இருந்து வருபவர்கள் பல்வேறு அனுபவங்களும் அணுகுமுறைகளும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அனுபவங்கள், அணுகுமுறைகளின் சங்கமத்தில் கட்டமைப்பும் நிர்வாகமும் செழிக்கும். இப்படித்தான் திராவிட இயக்கம் முன்வைத்த சமூகநீதியையும் இட ஒதுக்கீட்டையும் புரிந்துகொள்ளலாம்.


அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், சிதம்பரம் கோயிலைத் தீட்சிதர்களிடமிருந்து மீட்டது, கலப்புத் திருமணத் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கலப்புத் திருமணம் செய்வோருக்கு உதவித்தொகை, கலப்புத் திருமணம் என்றால் இருவரில் ஒருவரில் தாழ்த்தப்பட்டவராக இருக்கவேண்டும் என்ற வரையறை, இலங்கை அகதிக்குழந்தைகளும் தமிழகத்தில் கல்வி பெற வாய்ப்பு, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, நுழைவுத்தேர்வு ரத்து, பொறியியலில் தமிழ்வழிக்கல்வி, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, பெண்களுக்கு உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்துரிமை என்று கலைஞர் கொண்டுவந்த எல்லாத் திட்டங்களுமே இந்தப் பன்மைத்துவத்தை வலியுறுத்துபவை, எல்லோருக்கும் வாய்ப்புகளுக்கான வாசல்களைத் திறந்தவை.

கலைஞர் இதை ஆட்சியில் மட்டுமில்லை, தன் கட்சியிலும் பரிசோதித்துப் பார்த்தார்.

கலைஞர் பொற்கிழி விருது

1989-ம் ஆண்டில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்திலுள்ள மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டக்கூடாது என்று சாதியவாதிகளும் மதவாதிகளும் போராடினார்கள். ஆனால், 1972-லேயே சென்னையில் அம்பேத்கர் பெயரில் கலைக்கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர். அம்பேத்கர் நூற்றாண்டுவிழாவையொட்டி 1990-ல் சென்னை சட்டக்கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரைச் சூட்டினார் கலைஞர். 1997-ல் இந்தியாவிலேயே முதல் சட்டப்பல்கலைக்கழகத்தையும் அம்பேத்கர் பெயரில் உருவாக்கியதும் கலைஞர்தான். யாரைக் கோயில்களுக்குள் நுழையவிடக்கூடாது என்ற நிலை நிலவியதோ அந்த ஆதிதிராவிடரையும் பெண்களையும் அறங்காவலர்குழுவில் கட்டாயம் நியமிக்கவேண்டும் என்ற புரட்சிகர சட்டத்தையும் கொண்டுவந்தவர் கலைஞர்.

ஆட்சியில் தான் நிகழ்த்திய மாற்றத்தைக் கட்சிக்குள்ளும் கொண்டுவந்தார். கட்சியின் துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராகவும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கவேண்டும் என்பதைக் கட்சி விதியாக்கினார். தலைமையிலிருந்து மாவட்ட அமைப்பு வரை இந்த விதி நடைமுறைப்படுத்தப்பட்டது.  
எல்லோரும் ஒரு சமூகத்தின் இயக்கத்தில் பங்கேற்கும்போது அந்தச் சமூகம் சிறப்புற்று விளங்கும் என்பதைக் கலைஞரின் தமிழ்நாடு நிரூபித்திருக்கிறது. இதை இந்தியாவும் இப்போது கற்றுக்கொள்ள வேண்டும்.

கலைஞர் கருணாநிதி- அண்ணா

இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களும் எல்லா மொழிகளும் எல்லாத் தேசிய இனங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். மாநிலங்கள் தங்கள் தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் கூட்டாட்சித் தத்துவம் வலுப்படுத்தப்பட வேண்டும்.

மனிதக்குழுக்களாகத் தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், பாலினச்சிறுபான்மையினர் அனைவருக்குமான உரிமைகளும் பிரதிநிதித்துவமும் உறுதி செய்யப்பட வேண்டும்.
கலைஞரின் நூற்றாண்டில் இந்தப் பன்மைத்துவத்தை இந்தியா கற்றுக்கொள்ளட்டும்.


கலைஞரின் பொன்மொழி வழியாகவே நாம் இந்தப் பன்மைத்துவத்தைச் சொல்வோம்

நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்!

மேலும் படிக்க கருணாநிதி100: கருணாநிதியிடம் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியவை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top