அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது?
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை அரசு இல்லம், கரூர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். சுமார் 17 மணி நேரம் இந்தச் சோதனை தொடர்ந்து நிலையில், இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்து, மேலதிக விசாரணைக்காக அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது காரில் சென்றுகொண்டிருக்கும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து உடனடியாக அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.






அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி, எ.வ.வேலு உள்ளிட்டோர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றனர்.
மேலும் படிக்க Senthil Balaji : செந்தில் பாலாஜி கைது? - மருத்துவமனையில் அனுமதி, குவிந்த அமைச்சர்கள்... அடுத்து என்ன?