மணிப்பூருக்குச் செல்கிறார் ராகுல் காந்தி!
மணிப்பூரில் மைதேயி சமூக மக்கள் தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்கக் கோரி நீண்டகாலமாக அரசை வலியுறுத்தி வருகின்றனர். மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான அவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால், தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என குக்கி பழங்குடியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு சமூக மக்களிடையே பெரும் மோதல் வெடித்து, மணிப்பூர் கலவர பூமியாக தகித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல், வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் அத்தனையும் பலனளிக்காமல் போயின.

இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்து முடிந்தது. அதிக உயிர் பலி எண்ணிக்கை, உயிருக்குப் பயந்து முகாம்களுக்குள் தஞ்சமடைந்திருக்கும் மக்கள், எந்நேரமும் தொற்றிக்கொண்டிருக்கும் பதற்றம் என மணிப்பூரை முகாமிட்டிருக்கும் கலவர மேகங்கள் சுழன்றடித்துக் கொண்டிருக்கின்றன.
`இந்த விவகாரத்தில் ஒரே தீர்வு மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்கை டிஸ்மிஸ் செய்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதே' என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் மணிப்பூருக்குச் சென்று, அந்த மாநில மக்களைச் சந்தித்துப் பிரச்னைகள் குறித்துப் பேசவிருக்கிறார். நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களைச் சந்திக்கவிருக்கும் ராகுல் காந்தி, இம்பாலில் சமூக அமைப்பினரையும் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை டான் போஸ்கோ பள்ளியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை - EidMubarak
மேலும் படிக்க Tamil News Live Today: 2 மாதங்களாகத் தொடரும் வன்முறை... மணிப்பூருக்குச் செல்கிறார் ராகுல் காந்தி!