சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று தொடங்கி தற்போது வரையில் மழை நீடித்து வருகிறது. இன்றும் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை!
வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகல்பொழுதில் மிதமான மழை பெய்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாகவே கோடை வெயில் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளை குளிர்வித்துள்ளது.
மேலும் படிக்க Tamil News Today Live: தொடரும் மழை... சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!