Wagner: ஈவ இரககமறறவரகள பதன ஆதரவ படயல நரககடயல ரஷய - வகனர கழவன பனனண

0

2014-ம்‌ ஆண்டு ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட வாக்னர் ஆயுத குழு, தற்போது ரஷ்ய அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கியுள்ளது. ரஷ்ய - உக்ரைன் போரில் வாக்னர் ஆயுத குழுவிற்கு பெரும் பங்கு உண்டு. இந்நிலையில் வாக்னர் ஆயுத குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின்-க்கும்(Yevgeny Prigozhin), உக்ரைன் போரில் பணியாற்றிய ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலருக்கும் ஏற்பட்ட பகை தற்போது கிளர்ச்சியாக வெடித்துள்ளது.

உக்ரைனின் முக்கிய பகுதிகளை 0கைப்பற்ற உதவிய வாக்னர் குழு மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக, வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜன் குற்றம் சாட்டியுள்ளார். `உக்ரைனில் முகாமிட்டிருந்த தங்கள் படைகள் மீது ரஷ்ய ராணுவ ஏவுகணை தாக்குதல் நடத்தி 2000-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளதாக’ ப்ரிகோஸின் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின்

மேலும் யெவ்ஜெனி ப்ரிகோஜன் பேசியதாக வெளியான ஆடியோவில், "நாங்கள் 25,000க்கும் மேற்பட்டோர் இருக்கிறோம். சாகவும் தயாராக இருக்கிறோம். ரஷ்யாவை எதிர்க்க இது போதுமானவை அல்ல என்றாலும், ரஷ்ய அதிபர் புதினுக்கு இது ஒரு சவாலாக இருக்கும். ரஷ்ய ராணுவத்தின் தலைமையை வீழ்த்துவோம். எங்கள் படைகள் ரோஸ்டோவ் நகருக்குள் நுழைந்து விட்டது. மேலும், 3 ரஷ்யா ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தி விட்டோம். ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை எங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். எங்களின் வழியில் எந்த தடை வந்தாலும், அதனை தகர்ப்போம்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜன், ரஷ்ய அதிபர் புதினை ஆட்சியிலிருந்து நீக்க சபதம் எடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினும், ப்ரிகோஜன்னும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே , ப்ரிகோஜன் வெளியிட்டுள்ள அனைத்து தகவல்களும் பொய் என்று ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. மேலும் ரஷ்ய ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ப்ரிகோஜன் மீது கிரிமினல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரின் தூண்டுதலின் பேரில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். வாக்னர் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் ரஷ்ய ராணுவத்திற்கு திரும்பலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தின் விளக்கம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது ரஷ்ய அரசு. ரஷ்ய தலைநகரான மாஸ்கோ உட்பட பல முக்கிய நகரங்களில்‌ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பல முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அச்சத்தின் காரணமாக நகரில் பெருமளவில் மக்கள் இடம் பெயர்தல் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா

ப்ரிகோஜனின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர், "வாக்னர் ஆயுத குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல். கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும்" என்று எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து சென்ட் பீட்டர்ஸ் பெக்ஸ் நகரில் உள்ள வாக்னர் குழுவின் தலைமையகம் மூடப்பட்டது. இதற்கு பதிலளித்த வாக்னர் குழு, `விரைவில் ரஷ்யா புதிய அதிபரை காணும்’ என்று திகில் பரப்பியது.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "தீய வழியைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறார்கள். வேறொரு நாட்டின் வாழ்க்கையை அழிக்க துருப்புக்களை அனுப்பினார். அவர்கள் உயிருக்காக பயந்து தப்பி ஓடுவதையும் தடுக்க முடியாது. ரஷ்யாவின் பலவீனம் வெளிப்படையானது. ரஷ்யா தனது துருப்புக்களையும் கூலிப்படைகளையும் நம் நிலத்தில் எவ்வளவு காலம் வைத்திருக்கிறதோ, அவ்வளவு குழப்பம், வலி ​​மற்றும் பிரச்னைகள் பின்னர் அவர்களுக்கே ஏற்படும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

உலக நாடுகள் உற்று நோக்கும் இந்நிகழ்வின் பின்னணியில் இருக்கும் வாக்னர் குழுவினர் யார்?

வாக்னர் குழு ஒரு தனியார் ராணுவ குழு. டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்ற புதினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014-ல் இந்தக் குழுவை உருவாக்கினர். வாக்னர் குழு உக்ரைன் போரில் பெரும் பங்கு வகித்தது. 2022 முதல் இக்குழு ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பை நடத்தி வருகிறது. இக்குழுவில் தற்போது 50,000க்கும் மேலான வீரர்கள் உள்ளனர் என்கிறார்கள். தொடக்கத்தில் ரகசிய குழுவாக இருந்தபோது, வாக்னர் குழுவில் 5000 வீரர்கள் மட்டுமே இருந்தனர். 2015க்கு பின்னர் இந்த குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் களம் இறக்கப்பட்டது. அதாவது, உலகில் உள்நாட்டு போர் நடக்கும் இடங்களில் இவர்கள் கூலிப்படையாக செயல்படுவார்கள். யார் நிதி அளிக்கிறார்களோ அவர்களுக்கான போரிடுவார்கள். வாக்னர் குழு, ஆப்பிரிக்க தங்கச் சுரங்க நகரத்தைக் கட்டுப்படுத்த பாலியல் வன்கொடுமை மற்றும் மாஸ் படுகொலைகளை மிக சாதாரணமாக செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

மேலும் வாக்னர் குழுவின் தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜனியும், ரஷ்ய அதிபர் புதினும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது 18 வயதில் திருட்டு வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். மற்றொரு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். வெளியே வந்த ப்ரிகோஜனி ஹோட்டல் தொழிலில் ஆர்வம் காட்டினார். அவர்கள் சொந்த ஊரில், பல பெரிய ஹோட்டல்களை திறந்து உள்ளார். அதன் மூலம் கிடைத்த அரசு ஆடர்களுக்காக பணியாற்றி உள்ளார். அப்படியே, புதினிற்கும் ப்ரிகோஜனிக்குமான நட்பு தொடங்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ப்ரிகோஜன் 'புதினின் செல்ல சமையல்காரர்' என்ற பெயரையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வார்னர் குழு, புதினின் சொந்த தனியார் ராணுவம் என்றும், தனக்கு நெருக்கமானவர்களை கொண்டு இதனை உருவாக்கி அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் சொல்லாப்படுகிறது. சர்வதேச அளவிலான போர் கட்டுப்பாடுகள் காரணமாக, ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாமல் போகும் சட்ட விரோத நடவடிக்கைகளை இந்த வாக்னர் குழு மூலம் புதின் செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரிலும் கூட ரஷ்யா ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோத செயல்களை வாக்னர் ஆயுதக் குழுவினர் விளாடிமிர் புதினுக்காக செய்துள்ளது. இக்குழுவினர் நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள். மேலும் ஆயுதங்கள் இன்றி தனித்தும் போரிடும் திறனும் கொண்டவர்கள். ஈவு, இரக்கமின்றி கொடுக்கப்பட்ட அசைமென்டை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கும் இந்த குழுவினர், `கொடூர கொலைக்காரர்கள்’ எனவும் அழைக்கப்படுகின்றனர்.

வாக்னர் குழுவில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. அதுமட்டும்மின்றி தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட வாக்னர் குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. முன்னதாக உக்ரைனின் பக்முத்தில் வாக்னர் குழுவை இறக்கி தங்கள் படைகளுக்கு பெரும் சேதத்தை ரஷ்யா ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்னர் ஆயுதக் குழுவினர் பெரும்பாலும் ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்த படைகள் அல்லது ஆதரவு படைகளுடனே சண்டையிட்டு வந்தனர். வாக்னர் குழுவினர் அவர்கள் நிலைநிறுத்தப்பட்ட பகுதிகளில் போர்க்குற்றங்களை இழைத்துள்ளனர். அதில் பாலியல் வன்கொடுமை,கொள்ளைகள் மற்றும் கொடூர சித்திரவதை ஆகியவை அடங்கும். இதுநாள் வரையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ராணுவ தளவாடங்களை பெற்றிருக்கிறது இந்த வாக்னர் குழு. மேலும் பயிற்சிக்காக அரசின் அமைப்புகளை பயன்படுத்தி வந்திருக்கிறது. அதாவது, ரஷ்ய ராணுவ ரகசியங்களை நன்கு அறிந்த வாக்னர் குழு தற்போது ரஷ்யாவுக்கே எதிராக திரும்பியுள்ளது.!


மேலும் படிக்க Wagner: `ஈவு இரக்கமற்றவர்கள்’ புதின் ஆதரவு படையால் நெருக்கடியில் ரஷ்யா - வாக்னர் குழுவின் பின்னணி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top