திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை... பின்னணி என்ன?!

0

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் பா.ஜ.க-வின் செயல்பாடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என, தலைமையே கணிக்க முடியாத அளவுக்கு புதுப்புது சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க-வுடன் கூட்டணியை தொடர டெல்லி மேலிடம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் அ.தி.மு.க உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தூண்டுவது போல பலமுறை அமைந்தன.

அண்ணாமலைக்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்புகள் அவ்வப்போது கிளம்பிகொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் என்றால், ஆளுநரின் அரசியல் பேச்சுக்கள் பா.ஜ.க-வுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று வலதுசாரி ஆதரவு கொண்டவர்களே கொதிக்கும் நிலை ஏற்பட்டது. ஆளுநரை திரும்பப் பெறுங்கள் என தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சொல்லும் அதேபாணியில், சில வலதுசாரி ஆதரவாளர்களும் டெல்லிக்கு தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்களாம்.

அமித் ஷா, ஆர்.என்.ரவி

அதன் தொடர்ச்சியாக, ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலையும் சில கருத்துகளை முன்வைத்தார். தமிழிசை குறித்து கேட்ட கேள்விக்கு அண்ணாமலை சொன்ன பதிலாக இது இருந்தாலும், ஆர்.என்.ரவியை நோக்கியே இந்த பதிலை அவர் சொன்னதாக கமலாலய வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் சமயத்தில் ஆளுநர் எதையாவது பேசிக்கொண்டே சர்ச்சையை வளர்ப்பது, வாக்கு வங்கியை பாதித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அண்ணாமலை இவ்வாறு கூறினார் என்று கமலாலய வட்டாரத்தினர் விளக்கமும் கொடுக்கின்றனர்.

ஆனால், `அ.தி.மு.க குறித்து அண்ணாமலை சொல்லும் கருத்துகளால் அ.தி.மு.க-வின் வாக்குகள் நமக்கு மடைமாறுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆளுநரை இவர் விமர்சிப்பது மட்டும் எப்படி நியாயமாகும்?’ என்றும் பா.ஜ.க-வுள்ளேயே மாறுபட்ட கருத்தும் எழத்தான் செய்தது. `தமிழ்நாட்டில் பா.ஜ.க பெரிதாக வளர்ந்துவிட்டதாக காட்டிக்கொண்டாலும் இன்னும் 10,000 பூத்களுக்கு கூட முழுமையாக ஆட்களை நிரப்ப முடியவில்லை என்பதுதான் எதார்த்தம், அ.தி.மு.க-வை பகைத்துக்கொண்டு எப்படி தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று அண்ணாமலை சிந்தித்தாரா?’ என்கிற கேள்வியும் பாஜகவினர் மத்தியில் உள்ளது.

இவ்வாறாக அண்ணாமலை, ஆளுநர், அ.தி.மு.க என முக்கோண சர்ச்சை வளர்ந்துகொண்டே சென்ற நிலையில்தான் ஆளுநரின் 5 நாள் டெல்லி பயணம் அமைந்தது. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் தடாலடியாக அறிவித்து பின்வாங்கியது, செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அடுத்து செய்ய வேண்டியவை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசின் வழக்கறிஞர்களை சந்தித்து ஆர்.என்.ரவி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையின் பேச்சு குறித்தும் ஆளுநர் புகார் வாசித்ததாகவும் கூறப்பட்டது. இதனிடையேதான் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு திரும்பிய வேகத்தில், அண்ணாமலை டெல்லி அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளை கூட ஒத்திவைத்து அண்ணாமலை உடனே டெல்லி சென்றார்.

டெல்லியில் நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு

பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்த அண்ணாமலை பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர்கள் சொன்ன கருத்துக்களையும் கேட்டு வந்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது. இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, “அ.தி.மு.க கூட்டணியை சுமூகமாக எடுத்துச் செல்வது குறித்தும், அண்ணாமலை தொடங்கப்போகும் நடைப்பயணம் குறித்தும்தான் அதிகம் பேசியிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தால் ஏற்பட்டிருக்கும் தாக்கம், அதை மக்களிடம் தமிழக பா.ஜ.க எப்படி எடுத்துச் சென்றது? தி.மு.க-வினர் மத்திய அரசுக்கு எதிராக திசைதிருப்பும் முயற்சிகள் மக்களிடம் எடுபடுகிறதா என்பது குறித்தெல்லாம் ஜே.பி.நட்டா கேட்டிருக்கிறார். அதற்கு அண்ணாமலையும் விளக்கமளித்திருக்கிறார். ஆளுநர் விவகாரத்திலும் சில கருத்துக்களை அண்ணாமலை சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் களச் சூழலைப் புரிந்துகொண்டு ஆளுநர் பேசுவதுதான் நல்லது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்” என்றனர்.

அண்ணாமலை குறித்து ஆளுநர் கூறியதையும், ஆளுநர் குறித்து அண்ணாமலை கூறியதையும் டெல்லி மேலிடம் கேட்டுக்கொண்டதே தவிர வேறெந்த பெரிய ரியாக்ஷனும் இல்லை என்பதுதான் இருதரப்பு வட்டாரங்களிலும் இருந்து கிடைக்கும் பதிலாக இருக்கிறது. டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு ஆளுநரிடம் இருந்து இதுவரை அரசியல் கருத்துக்கள் எதுவும் வெளிப்படவில்லை. ஆனால் அவதூறு வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற அண்ணாமலை dmk files இரண்டாம் பாகம் குறித்தும் அதிரடியாக பேசிவிட்டுச் சென்றார். டி.ஆர்.பாலு சிறைக்குச் செல்லப்போவது உறுதி என்றும் கூறினார். நடைப்பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். வழக்கம்போல தனது பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்.

அண்ணாமலை

டெல்லி பயணம் ஆளுநருக்கு சாதகமாக முடிந்திருக்கிறதா அல்லது அண்ணாமலைக்கு சாதகமாக முடிந்திருக்கிறதா என்பது ஒருசில வாரங்கள் கடந்தாலே தெரிந்துவிடப்போகிறது என்கின்றனர் கமலாலய வட்டாரத்தில்.!


மேலும் படிக்க திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை... பின்னணி என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top