ஆந்திரா மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தின் நரசிபட்டினம் நகராட்சி (வார்டு 20) கவுன்சிலர் முலபர்த்தி ராமராஜு(40). தெலுங்கு தேசம் கட்சி ஆதரவில் கவுன்சிலராக வெற்றிப்பெற்ற இவர், ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கையை நடத்துகிறார். இந்த நிலையில், நேற்று நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட கவுன்சிலர், தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள்.
తెలుగుదేశం పార్టీ తరపున గెలిచిన లింగాపురం గ్రామ గిరిజన ప్రజాప్రతినిధి ఆయన. పదవిలో ఉండి కూడా 30 నెలలుగా గ్రామంలో ఒక్క కుళాయి కూడా వేయించలేకపోయానని... దీనికంటే చచ్చిపోవడం నయమని కౌన్సిలర్ల సమావేశంలో కన్నీరు పెట్టుకుని, చెప్పుతో కొట్టుకున్నారాయన.#AndhraPradesh #NalugellaNarakam… pic.twitter.com/u6k4E5KXZy
— Telugu Desam Party (@JaiTDP) July 31, 2023
இந்த செயலுக்கு அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "நான் மக்களுக்கு எதாவது நல்லது நடக்க வேண்டும் என கவுன்சிலர் பதவிக்கு போட்டி போட்டேன். மக்களும் என்னை நம்பி வாக்களித்து கவுன்சிலராக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், உள்ளூர் நகராட்சி அதிகாரிகள் எனது 20-வது வார்டை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள். நான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு 31 மாதங்கள் ஆகியும், எனது வாக்காளர்களுக்கு அளித்த குடிநீர் இணைப்பு வாக்குறுதியைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை.
இது தவிர வடிகால், மின்சாரம், சுகாதாரம், சாலைகள் மற்றும் பிற பிரச்னைகள் போன்ற அடிப்படை குடிமைப் பிரச்னைகளைக் கூட என்னால் தீர்க்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயற்சி செய்துவிட்டேன். அதனால்தான் என்னை நானே அடித்து தண்டித்துக்கொண்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார். அவர் அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும் படிக்க தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்... காரணம் என்ன?!