`ஆமாம், திமுக வாரிசுகளுக்கான கட்சி தான்!’ - திருச்சியில் கொதித்த மு.க.ஸ்டாலின்

0

தி.மு.க., டெல்டா மண்டலத்தில் கட்சி ரீதியாக உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரில் நடைபெற்றது. தி.மு.க., தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ``தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் நமக்கு ஒரு பெரிய பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறார். ஆக, அவரை மாற்ற வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை. தேர்தல் வரைக்கும் அவரே இருக்கட்டும். அப்போது தான் இன்னும் நமக்கு வாக்குகள் அதிகரிக்கும். நம்முடைய தொண்டர் பலத்திற்கும், கட்டமைப்பிற்கும் நிகராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகத்திலும் கூட ஒரு கட்சியும் இல்லை.

அந்த பலத்தை நாம் சமூக ஊடகங்களிலும், களத்திலும் முழுமையாகக் காட்ட வேண்டும். ஏனென்றால், நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பது தான் இந்தத் தேர்தலில் முக்கியம். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 40 தொகுதிகளை நம்முடைய அணி கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் நமது அணி வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க., சிதைத்துவிட்டது. இதற்கு எதிர்வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது.

பா.ஜ.க., ஆட்சி தொடரும் என்றால் இந்தியாவில் மக்களாட்சியை, சமூகநீதியை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. மீண்டும் இந்தியாவில் பா.ஜ.க., ஆட்சி அமைக்குமானால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது. ஏன் தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதலமைச்சரோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, உள்ளாட்சி அமைப்புகளோ இருக்காது. அத்தனையையும் காலி செய்து விடுவார்கள். இதுதான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும். நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று போனாலும், வட மாநில எம்.பிக்களை வைத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். எனவே தான் இந்தத் தேர்தலை மிக மிக முக்கியமானத் தேர்தல் என நான் சொல்கிறேன்.

மு.க.ஸ்டாலின்

மாநிலங்களில் பல்வேறு மொழியை பேசுபவர்களுக்கு, பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட ஒரு கட்சி தான் பாரதிய ஜனதா கட்சி. பா.ஜ.க., இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டுமென்று இந்த முக்கியமான இலக்கை முன்னெடுக்கின்ற 26 கட்சிகளை ‘இந்தியா’ என்ற கூட்டணியாக சேர்த்திருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்தியா என்னும் இந்தக் கூட்டணி தான். இதை பிரதமாக இருக்கின்ற மோடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``பா.ஜ.க-வை எதிர்க்க ஒரு வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என மோடி ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார். இந்த நோக்கத்தினை ஓராண்டாகவே நான் முன்னெடுத்து வருவதால் அவர்களுக்கு என் மீதும் கோபம். அதனால் தான் மோடி மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றாலும், அந்தமான் விமான நிலையத்தை திறந்து வைக்கச் சென்றாலும் அங்கேயும் தி.மு.க-வைத் தான் திட்டிக் கொண்டிருக்கிறார். தி.மு.க., வாரிசுகளுக்கான கட்சி என கேட்டுக் கேட்டுப் புளித்துப் போனதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். வேறு எதாவது யோசித்து கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.

மு.க.ஸ்டாலின்

நானே சொல்கிறேன், இது வாரிசுகளுக்கான கட்சி தான். (இன்னும் அழுத்தமாக மேடையை தட்டிக் கொண்டே சொல்கிறார்!) ஆமாம், இது வாரிசுகளுக்கான கட்சி தான். ஆரியத்தை வீழ்த்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள். தந்தை பெரியாரின், அண்ணாவின், கலைஞரின் வாரிசுகள் நாங்கள். இதனை தைரியமாக பெருமையோடு என்னால் சொல்ல முடியும். ஆனால், கோட்சேவின் வாரிசுகள் தான் நீங்கள். உங்களால் இதை தைரியமாக சொல்ல முடியுமா? சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா? 2002-ம் ஆண்டு குஜராத்தில் என்ன நடந்ததை என்பதை மக்கள் மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது. மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்றுவரை அந்த  மாநிலத்தை ஆளக்கூடிய பா.ஜ.க., அரசாலும், ஒன்றிய பா.ஜ.க., அரசாலும் தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்களும், மணிப்பூர் போலீஸாரும் கைகோர்த்துக் கொண்டு மக்களை தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே இதனைச் சொல்லியிருக்கிறார். ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்து மனக்கசப்பை உருவாக்கி, வெறுப்பு அரசியல் மூலமாக அரசியல் ஆதாயம் தேட நினைத்ததால் தான் இன்றைக்கு மணிப்பூர் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது.

இங்கு ஒரு கொத்தடிமைகள் கூட்டம் அதிமுக என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் யாராவது மணிப்பூரைப் பற்றி பேசினார்களா?.. ‘பா.ஜ.க-வுக்கு நான் அடிமையில்லை’ என்று சொல்லும் பழனிசாமி, மணிப்பூர் கொடுமைக்கு காரணமான அந்த மாநில முதலமைச்சரையோ, ஒன்றிய பா.ஜ.க-வையோ கண்டித்தாரா?.. பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஊழல் ஒழிப்பைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டு, அதற்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றம் போனவர் தான் பழனிசாமி.

கர்நாடகா மாநிலத்தில் ஊழலுக்காகத் தானே பா.ஜ.க., அரசை அங்கு மக்கள் விரட்டியடித்தார்கள். அ.தி.மு.க., மீதான ஊழல் வழக்குகளைக் காட்டி அவர்களை அடிபணிய வைத்தது பா.ஜ.க. கடந்த காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பா.ஜ.க-வுக்கு பயந்து அடமானம் வைத்தது அ.தி.மு.க. ஆக, உரிமைகளைக் கைவிட்டவர்களும், காவு வாங்கியவர்களும் இன்றைக்குக் கைகோர்த்து வருகிறார்கள். இவர்களை இந்தத் தேர்தலில் முழுமையாக நாம் வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களும் மணிப்பூரைப் போல ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும். தமிழை, தமிழினத்தை, தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டுமானால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை நாம் காப்பாற்றியாக வேண்டும். முத்துவேல் ஸ்டாலினின் போர்ப்படைத் தளபதிகள் நீங்கள். உங்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தல்களத்தை நான் ஒப்படைத்திருக்கிறேன். என் கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணியாற்றக்கூடியவர்கள் நீங்கள். கழகத்தின் வெற்றிக்காக களமாடுங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே.இந்தியா வெல்லும் அதை 2024 சொல்லும்” என்றார்.


மேலும் படிக்க `ஆமாம், திமுக வாரிசுகளுக்கான கட்சி தான்!’ - திருச்சியில் கொதித்த மு.க.ஸ்டாலின்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top