ரகல கநத மலமறயடட மனவ தளளபட சயத கஜரத உயர நதமனறம - அடதத எனன?!

0

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட லலித் மோடி, மோசடி வைர வியாபாரி நிரவ் மோடி குறித்தெல்லாம் விமரிசித்து பேசியிருந்தார்.

சுஷ்மிதாவுடன் லலித் மோடி

இதையடுத்து, ‘‘ராகுல் காந்தி, ஒரு சாதியையே அவமதித்துவிட்டார். ‘ஏன் எல்லாத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது?’ என்று பேசியதற்குத் தகுந்த தண்டனை தரப்பட வேண்டும்'' என்று குஜராத் முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி, குஜராத் மாநிலத்தின் சூரத் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், "ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. ரூ.15,000 அபராதத்துடன் ஜாமீனுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிரவ் மோடி

மறுநாள் அவர் மக்களவையில் இருந்தும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ஏப்ரல் 3-ம் தேதி சிறைத் தண்டனைக்கு எதிராகவும், தண்டனைக்கு இடைக்காலத்தடை விதிக்கக் கோரியும் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அதை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து தண்டனைக்கு தடைக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மோடி, ராகுல்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சக், தண்டனைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டு, கோடை விடுமுறைக்குப் பிறகு உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று(07-07-2023) காலை 11 மணிக்கு ராகுல் மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், "கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சூரத் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது. சூரத் விசாரணை நீதிமன்ற தண்டனை உத்தரவு சரியானது.

குஜராத் உயர் நீதிமன்றம்

அந்த உத்தரவில் தலையிட முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. ராகுல் காந்தி மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது" என கூறப்பட்டுள்ளது.

சூரத் விசாரணை நீதிமன்ற தண்டனை உத்தரவுக்கு தடை கிடைக்கும் பட்சத்தில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைக்கும் என அந்த கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. மாறாக ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி

இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பான குஜராத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பினை நாங்கள் பார்த்தோம். அதில் நீதிபதி தெரிவித்துள்ள காரணங்கள் ஆராயப்படுகிறது.

இந்தத் தீர்ப்பு, இவ்வழக்கை மேலும் தொடர்வதற்கான உறுதியை இரட்டிப்பாக்குகிறது" என தெரிவித்துள்ளார். மூத்த தலைவர் சந்தீப் சிங் சுர்ஜ்வாலா, "நீதியின் கேலி கூத்து! நீரவ் மோடி, நீஷல் மோடி, மெஹூல் சோக்சி போன்ற வங்கி மோசடிக்காரர்கள் தண்டிக்கப்படாமல், வஞ்சகம் மற்றும் பொதுப்பணக் கையாடல் குறித்து அம்பலப்படுத்தும் அமைதியின் தூதுவர் தண்டிக்கப்படுகிறார்.

ஜெய்ராம் ரமேஷ்

ராகுல் காந்தி உண்மையின், சத்தியத்தின், அச்சமற்ற, அதிகாரத்திலிருப்பவர்களை கேள்வி கேட்கும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். என்ன நடந்தாலும், நாங்கள் உண்மையின் பாதையில் அச்சமில்லாமல் அணி வகுத்துச் செல்கின்றோம். சத்தியமவே ஜெயதே!" என்று தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார், "நியாயம் வெற்றி பெறாதது மிகவும் துரதிர்ஷடமானது. இது ஜனநாயக படுகொலை. இன்னும் ஒட்டுமொத்த நாடும் எதிர்க்கட்சிகளும் ராகுலின் பின்னால் நிற்கின்றன. நாடு முழுவதையும் ஒருங்கிணைக்க போராடும் சிறந்த தலைவர் அவர்.

டி.கே.சிவகுமார்

பாஜக தலைவர்களால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை நாடாளுமன்றதிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றனர். அவர் இன்னும் வலு பெறுவார் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார், "ராகுல் காந்தி அரசியல் கருத்தாக்கத்தான் இதை தெரிவித்தார். அதற்கு இதுபோன்ற தீர்ப்பு இந்தியாவில் இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. நரேந்திர மோடி அரசின் தவறுகளை கடுமையாக சுட்டிக்காட்டி வருகிறார், ராகுல் காந்தி.

எம்.பி செல்லகுமார்.

குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் அதானிக்கு அடகு வைதார் மோடி என்பது குறித்து ஆதரத்துடன் நிரூபித்தார். இதற்கு பிரதிபலனாக ராகுல் காந்தி மீது திணிக்கப்பட்ட ஒரு தீர்ப்பு. எனவே இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம். அங்கு நிச்சயம் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார் உறுதியாக.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "தண்டனையை நிறுத்தி வைக்கவில்லை என்றால், தகுதி நீக்கம் நிச்சயமாக உண்டு. இனி உச்ச நீதிமன்றம் தான் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்க வேண்டும். உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்துவிட்டால், அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியது தான்.

ப்ரியன்

பிறகு 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. இது அவதூறு வழக்கில் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச தண்டனை ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் எடுத்துவைத்த வாதங்களை கண்டுகொள்ளவில்லை. தீர்ப்பு கொடுத்த 24 மணிநேரத்துக்குள் பதவி நீக்கம், அடுத்த 24 மணி நேரத்தில் அரசு இல்லத்தை காலி செய்தல் என கிட்டத்தட்ட பழி வாங்கும் செயலாகத்தான் இதை செய்திருக்கிறார்கள்.

இது ராகுல் காந்திக்கு மக்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை கொடுக்கும். மேலும் இந்த தீர்ப்பில், `ஏற்கெனவே ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியை கண்டித்தது. அப்படியிருந்தும் இவ்வாறு பேசியிருக்கிறார்’ என்று கூறப்பட்டிருக்கிறது. அது தவறான வாதம். இந்த வழக்கை பாஜக தொடர்ந்த பிறகு 2 ஆண்டுகாலத்துக்கு எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ராகுல் காந்தி

பிறகு அவர் வாபஸ் பெற்றார். நீதிபதி மாற்றத்துக்கு பிறகு மீண்டும் சென்று சம்மந்தப்பட்ட வழக்குக்கு உயர் கொடுங்கள் என்று கேட்டார். அப்படி விசாரணை தொடங்கப்பட்ட ஒருமாத காலத்துக்குள் வரலாற்றில் இல்லாத தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. எந்த அளவுக்கு விசாரணை வேகமாக நடந்தது.

எந்த அளவுக்கு ராகுல் காந்தியின் வாதத்தை அவர்கள் கேட்கவில்லை என்பது உள்ளிட்ட விஷயங்களை பார்க்கும் பொழுது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். ராகுலுக்கு விடுதலை உச்ச நீதிமன்றத்தில் கிடைத்தால் தான் உண்டு. பொறுத்திருந்து பார்க்கலாம்" என்றார்.


மேலும் படிக்க ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம் - அடுத்து என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top