சென்னை மாநகராட்சி: துப்புரவு பணிகளில் கோடிகளில் முறைகேடா?! - குற்றச்சாட்டும் விளக்கமும்

0

சென்னை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் பணிபுரியும் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் முறையாக வேலைக்கே வராமல் பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டில் தொடர்ந்து முறைகேடு செய்து வருவதாகவும், இதனால் மாதம் தோறும் லட்சக்கணக்கில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி-

இந்த முறைகேடு தொடர்பாக நம்மிடையே பேசிய பொதுநல வழக்கறிஞர் ருக்மாங்கதன், ``கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி துப்புரவு துறையில் நடக்கும் வருகை பதிவேடு ஊழல் முறைகேடுகளை பற்றி வாட்ஸ் ஆப் மூலம் சென்னை மாநகராட்சி ஆணையருக்குப் நான் புகார் தெரிவித்திருந்தேன். அதனடிப்படையில், கார்த்திகேயன் என்பவரின் தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தார் முன்னாள் ஆணையர் ககன்தீப் சிங் பேடி. அந்த விசாரணையில் குற்றம் செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டு 58,59,61 ஆகிய வார்டுகளில் உள்ள துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கும் 9/2 கீழ் நோட்டிஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.

நடவடிக்கை இல்லை!

அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முறைக்கேடுகள் தொடர்பான அறிக்கையை விசாரணைக் குழு சமர்ப்பித்தது. அதில் துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை பதிவேடு மோசடியில் ஈடுப்பட்டது உண்மை என்று கூறி குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை குற்றத்திற்கான தண்டனை மட்டும் அறிவிக்காமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், வருகைப் பதிவேடு முறைகேடுகளில் ஈடுபட்ட ஆய்வாளர்களுக்கு மட்டும் நோட்டிஸ் கொடுத்த ஆணையர் ஏன் துப்புரவு துறைக்கு பொறுப்பு வகித்து கண்காணித்து வரும் உதவி செயற் பொறியாளருக்கு எந்த ஒரு நோட்டிஸும் வழங்கவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படாததால், தற்போது மீண்டும் மீண்டும் உதவி செயற்பொறியாளர் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் தொடர்ந்து வருகை பதிவேடு மோசடியில் ஈடுபட்டு வருகின்றார்கள்" என குற்றம் சாட்டினார்.

பொதுநல வழக்கறிஞர் ருக்மாங்கதன்

சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை!

மேலும் இதனால் ஏற்படும் இழப்புகள் குறித்து நாம் விரிவாக கேட்டபோது, ``சென்னை மாநகராட்சி வருகை பதிவேடு முறைகேடுகளை தடுப்பதற்காக முன்னாள் கமிஷனர் பேடியின் முயற்சியால் மீண்டும் பயோ மெட்ரிக் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் பயோ மெட்ரிக் இயந்திரத்தில் எந்த வித முறைக்கேடுகளும் நடைபெறாமால் இருக்க CCTV கேமராக்களும் பொருத்தப்பட்டன. ஆனால் வருகைப் பதிவேட்டில் முறைகேடு செய்வதற்கு வசதியாக அனைத்து CCTV கேமிராக்களின் தொடர்புகளையும் துண்டித்து விஞ்ஞான ஊழல் முறைகேடுகளில் துப்புரவு ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். குறிப்பாக மண்டலம் 5-ல் உள்ள 61,62, மற்றும் 63-வது வார்டுகளில் உள்ள துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் சுமார் 100 துப்புரவு பணியாளர்களில் 20 முதல் 30 பணியாளர்கள் புக்கிங் என்ற முறையில் பணிக்கு வரமால் மாதம் தோறும் 10-ம் தேதி முதல் 14 -ம் தேதி வரை அலுவலகம் வந்து கைரேகை வைத்து செல்கின்றனர்.

பஸ்டாப்பை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்

ஆண்டுக்கு 48 கோடி இழப்பு?

இதற்காக ஒரு பணியாளரிடம் இருந்து மாதம் தோறும் 5000 ருபாய் வீதம் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும் 30 முதல் 40 பணியாளர்கள் ஒன் டச் என்ற முறையில் இரண்டு மணி நேரம் மட்டும் பணி செய்து விட்டு அடுத்த நாள் வந்து கைரேகை வைப்பதற்கு மாதம் தோறும் ஒரு பணியாளரிடம் இருந்து 2000 ரூபாய் வீதம் 60000 முதல் 80000 ஆயிரம் ருபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தற்காலிக பணியாளர்களிடம் மாதம் தோறும் ஆயிரம் ருபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த முறைக்கேட்டின் மூலம் ஒரு வார்டில் மட்டுமே சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை ஊழல் நடைப்பெற வாய்ப்பிருக்கிறது. அப்படி சென்னை மாநகராட்சி உள்ள 200 வார்டுகளிலும் கணக்கிட்டு பார்த்தால் மாதம் சுமார் நான்கு கோடிகள் வீதம் வருடத்திற்கு சுமார் 48 கோடிகள் வரை துப்புரவு துறையில் முறைக்கேடுகள் நடக்க முகாந்திரம் இருக்கிறது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 48 கோடிகள் இழப்பீடு ஏற்படலாம் எனத் தெரிகிறது.

மேலும், இந்த வார்டுகளில் நடைபெற்று வரும் இந்த பயோ மெட்ரிக் திருத்தம் பற்றி மண்டலம் அலுவலர், செயற் பொறியாளர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பாளர் வரை அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன். இதுபோன்ற விஞ்ஞான ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் இந்த முறைகேடுகளில் முக்கிய அங்கம் வகிக்கும் உதவி செயற்பொறியாளர்கள் மீதும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என கோரிக்கை வைத்தார்.

பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு

அப்படி ஏதும் இல்லையே! - வார்டு கவுன்சிலர்கள்

இந்த புகார்கள் எழுந்த மண்டலம் 5-ல் உள்ள 61, 62, மற்றும் 63-வது வார்டு கவுன்சிலர்களிடம் தொடர்புகொண்டு பேசினோம். 61-வது வார்டு கவுன்சிலர் ஃபாத்திமா முசாஃபர், ``சென்னை மாநகராட்சியிலேயே முக்கியமான வார்டு என்னுடையது. எக்மோர் ரயில்வே ஸ்டேசன், குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை, ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் என பலவும் இங்குதான் இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் என பல வி.ஐ.பிகளும் வந்துச்செல்லும் பகுதி என்பதால் மற்ற பகுதிகளைவிட மிகவும் பொறுப்பாக, முறையா துப்புரவு பணிகள் நடந்து வருகின்றன. துப்பரவு பணியாளர்கள் பற்றாக்குறைதான் இருக்கிறதே தவிர, இருப்பவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு முகாந்திரமும் இல்லை!" என மறுத்தார்.

மாமன்ற கூட்டம் - சென்னை மாநகராட்சி

அதேபோல, 62-வது வார்டு கவுன்சிலர் ஜெகதீசன், ``எனது வார்டின் அனைத்து பகுதிகளுக்கும் விசிட் செய்கிறேன். அரசு துப்புரவு பணியாளர்கள், கான்ட்ராக்ட் துப்புரவு பணியாளர்கள் என இரு பிரிவினரும் பணிகள் மேற்கொள்கின்றனர். முன்பு வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும் நிலை இருந்தபோது வேண்டுமானால் முறைகேடு நடந்திருக்கலாம், ஆனால் இப்போது பயோமெட்ரிக் ஃபிங்கர் பிரிண்ட் வந்தபிறகு யாராலும் ஏமாற்ற முடியாது. கைரேகை இல்லை எனில் சம்பளம் இல்லை!" என்றார். தொடர்ந்து, 63-வது வார்டு கவுன்சிலர் சிவ ராஜசேகரன், ``சிசிடிவி கேமராக்கள் இயங்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் பயோமெட்ரிக் வைத்துதான் வருகைப்பதிவேடு செய்யப்படுகிறது. அரசு பணியாளர்களுக்கு ஆண்டுக்கு குறிப்பிட்ட விடுமுறைகள் இருக்கின்றன அவற்றை எடுத்துக்கொள்ளலாம். கான்ட்ராக் பணியாளர்கள் விடுமுறை எடுக்கும்போது அந்த நாளுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. மற்றபடி யாரும் ஏமாற்றுவதாகத் தெரியவில்லை. அப்படி பணிக்கு செல்லாமல் இருந்தால் குப்பைகள் தேக்கமடைந்து ஊரே சீர்கெட்டுவிடுமே?" என கேள்வியெழுப்பினார். அதேபோல சம்மந்தப்பட்ட வார்டுகளில் வேலைபார்க்கும் துப்பரவு பணியாளர்களும் இந்த குற்றச்சாட்டை மறுத்து பேசினர்.

குற்றம் நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்போம்!

இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை (solid waste management- SWM) துறையின் தலைமை பொறியாளர் என்.மகேசனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``சென்னை மாநகராட்சியின் துப்புரவுப் பணியைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களைத் தனியாருக்கு கொடுத்துவிட்டோம். மீதமுள்ள 5 மண்டலங்களையும் தனியார்மயமாக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து மண்டலங்களிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு இருக்கின்றன.

துப்புரவு பணியாளர்கள்

துப்புரவு பணிகள் அனைத்தையும் சிறந்த முறையில் துப்புரவு பணியாளர்கள் கையாண்டு வருகின்றனர். யாராவது விடுமுறை எடுத்தால் அதற்கு பதிலாக வேறொருவர் அந்தப் பணியைச் செய்த மாற்றிவிடப்படுகிறார்கள். எந்த வகையிலும் எந்த இடங்களிலும் துப்புரவு பணிகள் தடைபட்டு நிற்கவில்லை. அனைத்தையும் முறையாக கண்காணித்து வருகிறோம். செயற்பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் லஞ்சம் வாங்குறார்கள் என்று யார் என்று எங்களுக்கு புகார் தெரிவியுங்கள் நிச்சயம் நாங்கள் வெளிப்படையான, தீவிரமான நடவடிக்கை எடுக்கிறோம். கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை பற்றி எனக்கு தெரியவில்லை. விசாரிக்கிறேன். ஒரு சில இடங்களில் CCTV கேமரக்கள் பழுதடைந்திருக்கலாம். அதை உடனடியாக சரிசெய்துவிடுவோம். ஆனால், 100% எந்த முறைகேடுகளும் இதில் நடைபெறவில்லை. இந்த குற்றச்சாட்டு ஒரு அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டு!" என்றார்.


மேலும் படிக்க சென்னை மாநகராட்சி: துப்புரவு பணிகளில் கோடிகளில் முறைகேடா?! - குற்றச்சாட்டும் விளக்கமும்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top