ராசி பலன்கள்

0

ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை - ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த துல்லியமான ராசி பலன்கள்!

மேஷம்: உங்கள் பூர்வபுண்ணியாதிபதி சூரியன் ஆட்சிபெற்று நிற்பதால் பிள்ளைகள் பொறுப்பாகச் செயல்படுவார்கள். மகளுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். விசேஷங்களால் வீடு களைகட்டும். பழைய கடனில் ஒருபகுதியைப் பைசல் செய்வீர்கள். அரசு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புத்திசாலித்தனம் வெளிப்படும்.

சுக்கிரனும், செவ்வாயும் வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் வரும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் குறித்த கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டார்கள்.

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் நேரம் இது.

ரிஷபம்: பூர்வபுண்ணியாதிபதியும், தனாதிபதியுமான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உருவாகும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். சுகாதிபதி சூரியன் சாதகமாக இருப்பதால் தாயாரின் ஆரோக்கியம் மேம்படும்.

சுக்கிரன் 3-ல் அமர்ந்திருப்பதால் முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

விடாமுயற்சியால் இலக்கை எட்டும் நேரம் இது.

மிதுனம்: சூரியன் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் முடியாமலிருந்த பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வருமென நினைத்திருந்த பணம் வந்துசேரும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப்பேசுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வருங்காலத்திட்டங்கள் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் விலகும்; வீட்டில் நிம்மதி நிறைந்திருக்கும்.

சுக்கிரனும், குருவும் சாதகமாக நிற்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை எப்பொழுதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் இனி வலிய வந்து நட்புறவாடுவார்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

முயற்சிகள் வெற்றியாகும் காலம் இது.

கடகம்: புதன் சாதகமாக இருப்பதால் தடைப்பட்ட வேலைகளை மன உறுதியுடன் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கியத் திட்டங்களுக்கு வழிவகுப்பீர்கள். தனாதிபதி சூரியன் 2-ல் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் வரவேண்டிய பணம் வந்து சேரும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சுக்கிரன் வலுவாக நிற்பதால் பரபரப்பாகச் செயல்பட்டு பல வேலைகளையும் முடிப்பீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும்.

செவ்வாய் 3-ல் நிற்பதால் கடினமான சூழ்நிலைகளிலும் தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். எதன்பொருட்டும் அகலக்கால் வைக்கவேண்டாம். புதிய விஷயங்களில் கவனம் தேவை. வேலையாட்கள், வாடிக்கையாளர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கலைத் துறை யினருக்குத் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் காலம் இது.

சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியன் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் முயற்சிகளில் இருந்த பின்னடைவு விலகும். உங்களின் கௌரவம், புகழ் ஒருபடி மேலோங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதன் வலுவாக இருப்பதால் அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். சுக்கிரன் வலுவிழந்திருப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

24-ம் தேதி முதல் சனி வலுவாக இருப்பதால் பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில், உங்களின் முயற்சிகள் பெரிய பலன்களைத் தரும். இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

அடிப்படை வசதிகள் பெருகும் காலம் இது.

கன்னி: ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். அரசு அதிகாரிகளின் துணையுடன் வேலைகளை முடிப்பீர்கள். 12-ல் சூரியன் நிற்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் வீடு கட்ட லோன் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.

சுக்கிரனும் லாப வீட்டில் நிற்பதால் அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியாகச் செயல்படுவீர்கள்; புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களின் பணிகள் வெகுவாக பாராட்டப்படும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் காலம் இது.

துலாம்: உங்களின் பாக்கியாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் புத்திசாதுர்யத் துடன் தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். கையில் காசு பணம் தேவை யான அளவு இருக்கும். நெடுநாள்களுக்குப் பிறகு பால்ய சிநேகிதர்களைச் சந்திப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள், மனப் பிணக்குகள் நீங்கும்; அந்நியோன்யம் பிறக்கும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு சுப காரியங்கள் கூடிவரும். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு.

சுக்கிரன் 10-ல் நிற்பதால் மனைவி வழியில் அலைச்சல் இருக்கும். மனைவிக்கு வேலை கிடைக்கும். புதுப் பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். அரசியல்வாதிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் நேரம் இது.

விருச்சிகம்: ராசிக்கு 10-ம் வீட்டில் சூரியன் பலம்பெற்றிருப்பதால் புதிய அணுகுமுறையால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் பழைய சொத்தை நல்ல விலைக்கு விற்று, புதிய சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களிடையே எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகளின் கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். பூர்வீக சொத்தைச் சீர் செய்வீர்கள்.

சுக்கிரன் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் சில நேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவார்கள்.

நல்ல வாய்ப்புகள் தேடிவரும் காலம் இது.

தனுசு: சூரியனும் 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் கடினமான, சவாலான வேலைகளையும் உடனே முடிப்பீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடன் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வாய்ப்புகள் வரும். புதன் 9-ல் அமர்வதால் மனைவிவழியில் ஆதாயம் உண்டு. அவரின் உடல் நலம் சீராகும். உறவினர்கள் மதிப்பார்கள். உறவினர் வீட்டுக் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் மரியாதை கூடும்.

8-ல் சுக்கிரன் மறைந்தாலும் பணப்புழக்கம் உண்டு ஆனாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் கடன் வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் குறையாது. வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். தலைமையால் பாராட்டப்படு வீர்கள். கலைத்துறையினரின் கலைத்திறன் வளரும்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் காலம் இது.

மகரம்: சூரியன் 8-ம் வீட்டில் ஆட்சிபெற்றிருப்பதால் உங்களின் முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலமான நிலை காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். கேட்ட இடத்தில் முதலீட்டுக்கான தொகை கிடைக்கும்.

சுக்கிரன் 7-ல் நிற்பதால் மனைவிக்கிருந்த முதுகு, மூட்டு வலி, சலிப்பு, சோர்வு நீங்கும். வீடு மாறுவீர்கள். திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கலைத்துறையினரிடையே போட்டிகள் அதிகரிக்கும்.

அமைதியாக இருந்து சாதிக்க வேண்டிய காலம் இது.

கும்பம்: புதன் 7-ல் அமர்ந்திருப்பதால் வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள் உதவுவார்கள். சூரியன் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்குகளில் சாதகமான போக்கே காணப்படுகிறது.

சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் மனைவியுடன் மனக்கசப்பு, டென்ஷன், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் லாபம் சுமாராகத் தான் இருக்கும். வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கலைத்துறையினரை உதாசினப் படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும்.

கறாராகப் பேசிக் காரியம் சாதிக்கும் காலம் இது.

மீனம்: சுக்கிரனும் 5-ல் நிற்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சூரியன் வலுவாக அமைந்திருப்பதால் சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

ஆனால் புதனும் 6-ல் மறைவதால் உறவினர்கள், நண்பர்களுடனான உறவில் சலசலப்புகள் வந்து போகும். நிதானம் அவசியம். வியாபாரம் சூடு பிடிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், உங்களுக்கு முட்டுக்கட்டை போட்ட அதிகாரி இடம் மாறுவார்; புதிய அதிகாரியால் அனுகூலம் உண்டு. கலைத் துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் நேரம் இது.


மேலும் படிக்க ராசி பலன்கள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top