இங்கே சரத் பவார்... அங்கே கெஜ்ரிவால்... `இந்தியா' கூட்டணியில் விரிசல் தொடங்கியதா?!

0

மத்தியில் இருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டிருக்கின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்துவிட்டால், தங்களுடைய கதையை முடித்துவிடுவார்கள் என்ற அச்சமே எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்திருக்கிறது என்பது பாஜக-வினரின் வாதம்.

எதிர்க்கட்சிகள் கூட்டம் - பெங்களூரு

இல்லையென்றால், மாநிலங்களில் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் கட்சிகளால், தேசிய அளவில் எப்படி கைகுலுக்கிக்கொள்ள முடியும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சேருவதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தவிர, மற்ற கட்சிகளுக்கு பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்ற நிலை இருந்தது.

ஆனாலும், பா.ஜ.க-வை வீழ்த்தியாக வேண்டும் என்கிற அழுத்தத்தால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அவர்கள் இருவரும் சங்கமித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்களுக்கு இடையே இருக்கும் பலவீனங்களையும் கருத்து முரண்பாடுகளையும் பயன்படுத்தி, ‘இந்தியா’ கூட்டணியை உடைப்பதற்கு பா.ஜ.க முயற்சி செய்யும் என்பது அடிப்படை அரசியல் அறிந்த அனைவருக்குமே தெரியும்.

மம்தா பானர்ஜி

ஆனால், இவர்களிடம் இருக்கும் பலவீனத்தாலும், கருத்து முரண்பாடுகளாலும் இவர்களே கூட்டணியை சிதைக்கப்போகிறார்கள் என்ற ரீதியிலான தகவல்கள் அரசியல் வெளியில் உலாவுகின்றன.

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்தது. ஆரம்பத்தில் தயங்கினாலும், பிறகு, கெஜ்ரிவால் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ‘இந்தியா’ கூட்டணியின் ஓர் அங்கமாக ஆம் ஆத்மி மாறியது. இப்போது, ‘டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பு, ‘இந்தியா’ கூட்டணியில் ஓட்டை விழுந்துவிடுமோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் 2015-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்துவருகிறது ஆம் ஆத்மி கட்சி. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றாலும், 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட ஆம் ஆத்மி டெல்லியில் வெற்றிபெறவில்லை. ஏழு தொகுதிகளிலும் பா.ஜ.கதான் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அறிவிப்புக்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும்கூட, டெல்லியை தங்கள் கோட்டை என்று ஆம் ஆத்மி கருதிக்கொண்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தால், அதை எப்படி ஆம் ஆத்மி ரசிக்கும்?

காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆம் ஆத்மி நிர்வாகிகள் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். “காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைக்கவில்லையென்றால், பிறகு, இந்தியா கூட்டணியில் இடம்பெறுவதில் எந்த அர்ததமும் இல்லை. ‘இட் ஈஸ் வேஸ்ட் ஆஃப் டைம்’. இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து எங்கள் கட்சின் உயர்மட்டத் தலைவர்கள் முடிவுசெய்வார்கள்” என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியிருக்கிறார்.

சரத் பவார்

எனவே, இதில் காங்கிரஸ் கட்சி எந்தளவுக்கு இறங்கிவரும், ஆம் ஆத்மி எந்தளவுக்கு இணங்கிப்போகும் என்பது இப்போதைக்கு கேள்விக்குறிதான். டெல்லி மட்டும் அல்ல, ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் மற்றொரு மாநிலமான பஞ்சாபில் இதே சிக்கல் இருக்கிறது.

இந்த நேரத்தில், இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சரத் பவாரை சுற்றி சர்ச்சைகள் சுழல ஆரம்பித்திருக்கின்றன. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர் சேரப்போகிறார் என்று யூகத்தின் அடிப்படையிலான தகவல்கள் றெக்கை கட்டிப்பறக்கின்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான அஜித் பவார், பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க பக்கம் சாய்ந்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராகிவிட்டார். கட்சியைப் பிளந்துகொண்டு சென்றாலும், அவருக்கும் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கும் இடையே இயல்பான உறவு இருக்கிறது. இருவரும் சந்தித்து ஆலோசனைகளிலும் ஈடுபடுகிறார்கள். இந்தச் சூழலில்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சரத் பவார் சேரப்போகிறார். மத்திய அமைச்சரவையில் அவர் இடம்பெறப்போகிறார் என்ற செய்திகள் பரவின.

சுப்ரியா சுலே

அதற்கு முன்னதாக, ‘சரத் பவாருக்கோ, அவருடைய மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலேவுக்கோ மத்திய அமைச்சர் பதவி வழங்க உறுதியளிக்கப்பட்டது’ என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பிருத்விராஜ் சவான் கொளுத்திப்போட்டார். அது, கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதை, உடனடியாக மறுத்திருக்கிறார் சுப்ரியா சுலே. ‘மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக யாரும் தம்மை அணுகவில்லை’ என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆனாலும், இந்தச் சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. அஜித் பவாரும், சரத் பவாரும் ஏன் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வியை காங்கிரஸ் நிர்வாகிகள் எழுப்புகிறார்கள். அதற்கு உரிய பதிலை சரத் பவார் சொல்லாதது வரை இந்த சர்ச்சை தொடரவே செய்யும். மேலும், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதை, சரத் பவார் தான் முன்னின்று நடத்தப்போகிறார் என்று செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் இத்தனை சர்ச்சைகள். எல்லாம், பதவி படுத்தும் பாடு.


மேலும் படிக்க இங்கே சரத் பவார்... அங்கே கெஜ்ரிவால்... `இந்தியா' கூட்டணியில் விரிசல் தொடங்கியதா?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top