"நான் சார்பட்டா பாக்சர்; ஒரு அடியாவது திருப்பி அடிப்பேன்!"- கடைசி தலைமுறை ரிக்‌ஷாகாரரின் நேர்காணல்

0
ஒரு மதிய வேலையில், சென்னை ராயபுரம் வழியாக சென்ற போது, சென்னையில் வேறு எங்கும் பார்க்க முடியாத சைக்கிள் ரிக்‌ஷாக்களை அங்கு பார்த்தோம்.

ஒருவர் வயதான ஒரு அம்மாவை ரிக்‌ஷாவில் உட்கார வைத்து மிதித்துச் சென்றார். சிலர், எந்த சவாரியும் இல்லாமல், நிழலில் வண்டியை நிறுத்தி விட்டு உட்கார்ந்து இருந்தனர்.

பாக்சர் ரிக்‌ஷாகரர்

சென்னையில் ஒரு காலத்தில், மக்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் ரிக்‌ஷாதான் முக்கிய போக்குவரத்தாக இருந்தது. சந்தைக்குப் போய் வர, குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வர, கோவிலுக்குச் செல்ல என பெண்கள் அதிகமாக சைக்கிள் ரிக்‌ஷாவையே நம்பி இருந்தார்கள். சைக்கிள் ரிக்‌ஷா வருவதற்கு முன், கை ரிக்‌ஷா இருந்தது. வெயிலிலும் மழையிலும், மனிதரை மனிதரே சுமந்துகொண்டு இழுத்துச் செல்லும் கை ரிக்‌ஷாவிற்கு பல வித விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. கலைஞர் ஆட்சிக்கு வந்த பின், 1970ல் கை ரிக்‌ஷாவை ஒழித்து, கை ரிக்‌ஷா ஓட்டியவர்களுக்கு எல்லாம் இலவசமாக சைக்கிள் ரிக்‌ஷா வழங்கினார்.

காலச் சக்கரம் வேகமெடுக்க, மக்களும் அந்த வேகத்திற்கு நிகராக ஆட்டோ, ஸ்கூட்டி என தங்கள் போக்குவரத்தை மாற்றிக்கொண்டனர். சைக்கிள் ரிக்‌ஷாக்களின் எண்ணிக்கையும் அப்படியே குறைந்து, இன்று ராயபுரத்தில் 20க்கும் குறைந்த சைக்கிள் ரிக்‌ஷாக்களே இருக்கின்றன. ஜார்ஜ் டவுன், பாரிஸ் கார்னர் எனக் கணக்கிட்டால் மொத்தம் நூறு ரிக்‌ஷாக்களை பார்ப்பதே அதிசயம்தான். 

அன்னை தெராசா ஏறுன ரிக்‌ஷா

சோர்ந்து போயிருந்த பல ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்கு மத்தியில், உற்சாகமாக ஒரு எம்.ஜி.ஆர் பாடலை சத்தமாக பாடியபடி ரிக்‌ஷாவை மிதித்துக்கொண்டு வந்த ஆண்டனி மோசஸ், அங்கிருப்பவர்களிலேயே தனித்துவமாகத் தெரிந்தார். அவர் சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் கதையைக் கேட்க, அவரோடு உட்கார்ந்து பேச ஆரம்பித்தேன். ரிக்‌ஷாவை ஓரமாக நிறுத்திவிட்டு, பேசத் தொடங்கினார். “எங்க தாத்தா கை ரிக்‌ஷா ஓட்டினாரு. என் அப்பாவும் ரிக்‌ஷாதான் ஓட்டினாரு. நானும் 15 வயசுல ஆரம்பிச்சு, இப்போ எனக்கு 70 வயசு ஆகுது. இப்ப வரை நான் தினமும் ரிக்‌ஷா ஓட்டிட்டுதான் இருக்கேன். எனக்கு இப்போ 70 வயசு ஆகுது. நானும் 15 வயசுல இருந்து ரிக்‌ஷாதான் ஓட்டிட்டு இருக்கேன்.

கலைஞர் கை ரிக்‌ஷாவை ஒழிச்சு, சைக்கிள் ரிக்‌ஷாவ எங்க எல்லாருக்கும் கொடுத்தாரு. அவர் கொடுத்த ரிக்‌ஷாதான் இது. ரிக்‌ஷா ஓட்டினாதான் என் உடம்பு ரீசார்ஜ் ஆகி, சுறுசுறுப்பா இருக்கும். அதனாலதான், இந்த வயசுலையும் ரிக்‌ஷா ஓட்டிட்டு இருக்கேன். இந்த ரிக்‌ஷா ஓட்டிதான் என் மூணு குழந்தைகளையும் படிக்க வெச்சேன். அதனால, எனக்கு இந்த ரிக்‌ஷாதான் எல்லாமே.

கடைசி தலைமுறை ரிக்‌ஷாகாரர்

அப்போ எல்லாம் என்ன அவசரம்னாலும் ரிக்‌ஷாவைதான் கூப்டுவாங்க. நடு ராத்திரி எல்லாம் உடம்பு சரி இல்லாதவங்கள சுமந்துக்கிட்டு ஹாஸ்பிடல் போயிருக்கோம். பல பேர் உயிர காப்பாத்த இந்த ரிக்‌ஷாதான் உதவி இருக்கு. அதேபோல, பல பிரபலங்களும் கூட எங்க ரிக்‌ஷாவுல போயிருக்காங்க. அன்னை தெரசா சென்னைக்கு வந்தப்ப, என் ரிக்‌ஷால உக்கார வெச்சுத்தான் கூடிட்டு போனேன். அதெல்லாம் ஒரு காலம். எல்லாரும் விரும்பி வந்து ரிக்‌ஷாவுல ஏறுவாங்க. ஆனா இப்போ யாரும் எங்கள திரும்பிக் கூட பாக்குறது இல்ல.

அந்தக் காலத்துல நான் ஒரு பெரிய பாக்சர். பத்து பேர் வந்தாலும் சண்டை போட்டு ஜெயிச்சுருவேன். இப்பவும், என் கூட யாராவது சண்டைக்கு வந்தா, திருப்பி ஒரு அடி அடிக்காம விடமாட்டேன். நான் சார்பேட்டா பரம்பரையைச் சேர்ந்தவன். பாக்சிங் எங்களுக்கு ஒழுக்கத்தைதான் கத்துக் கொடுத்துச்சு. எல்லாரும் என் மேல பந்தயம் எல்லாம் கட்டுவாங்க. நிறைய போட்டிகள் ஜெயிச்சு இருக்கேன். ஆனா காலப்போக்குல பாக்சிங்கை ஒரு விளையாட்டா பார்க்காம, அதை ஒரு ரவுடி தொழில்னு தப்பா சித்தரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால எல்லாரும் பாக்சிங்ல இருந்து விலகிட்டாங்க... ஆனா, என் பையனுக்கு நான் பாக்சிங் கத்துக் கொடுத்திருக்கேன். மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமா பாக்சிங் இங்க பரவிட்டு இருக்குறது சந்தோஷமா இருக்கு.

பாக்சிங் இல்லன்னு ஆனதும் நான் முழு நேரமா ரிக்‌ஷா ஓட்ட ஆரம்பிச்சிட்டேன். எனக்கு இது தவிர வேற எதுவும் தெரியாது. இப்போ ரிக்‌ஷா ஓட்டி ஒரு நாளுக்கு நூறு ரூபா வந்தாலே பெரிய விஷயம்தான். பக்கத்துல ஸ்கூல் குழந்தைங்க கொஞ்ச பேர் என் வண்டியில வருவாங்க. அதனால மாசம் ஒரு வருமானம் வருது. என் பசங்க, பேர பசங்க எல்லாம் வளந்து சம்பாதிக்க ஆரம்பிசிட்டாலும், நமக்குன்னு ஒரு வருமானம் இருக்கணும்ல. அது மட்டும் இல்லாம, நான் வேலை செய்யாம வீட்ல உக்காந்துட்டா மனசும் உடம்பும் படுத்துடும். எனக்கு நூறு வயசு ஆகும் போது கூட ரிக்‌ஷா ஓட்டணுங்குறதுதான் என் ஆசை.....” என்று விடைபெற்றுக்கொண்டார்.


மேலும் படிக்க "நான் சார்பட்டா பாக்சர்; ஒரு அடியாவது திருப்பி அடிப்பேன்!"- கடைசி தலைமுறை ரிக்‌ஷாகாரரின் நேர்காணல்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top