அணி மாறிய அதிமுக கவுன்சிலர்கள்; நம்பிக்கையில்லா தீர்மானம் - தோகைமலை ஒன்றியத்தை 'கைப்பற்றிய' திமுக

0

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது தோகைமலை ஊராட்சி ஒன்றியம். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இந்த ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 15 இடங்களில் அ.தி.மு.க 10 இடங்களிலும், தி.மு.க 4 இடங்களிலும், பா.ஜ.க ஓர் இடத்தையும் கைப்பற்றினர். தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த லதா ரெங்கசாமி தேர்வுசெய்யப்பட்டார். அதோடு, துணைத்தலைவர் பதவியையும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாப்பாத்தி சின்னவழியான் கைப்பற்றினார்.

இந்த நிலையில், `தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தி.மு.க-வினர் அதிகாரத் துஷ்பிரயோகம், மிரட்டல்கள், பொய்வழக்குகள் மூலம் தோகைமலை ஒன்றியத்தில் எட்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களை தி.மு.க பக்கம் இழுத்துவிட்டதாக’, அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாக குற்றம்சாட்டினார். இதற்கிடையில், தி.மு.க சார்பில் நின்று வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர் ஒருவரை, அ.தி.மு.க-வினர் தங்கள் கட்சிக்கு இழுத்தனர். இறுதியாக, தி.மு.க பலம் 11 ஆக உயர்ந்தது. மாறாக, அ.தி.மு.க பலம் மூன்றாகக் குறைந்தது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் (அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்)

இந்த நிலையில், தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த 11 தி.மு.க ஆதரவு கவுன்சிலர்களும், அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு குளித்தலை ஆர்.டி.ஓ புஷ்பாதேவியிடம் மனு அளித்தனர். 15 கவுன்சிலர்கள் உள்ளடக்கிய தோகைமலை ஒன்றியத்தில், 80 சதவிகிதம் கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்ற நிலை ஏற்பட்டது.

அதற்கு, 12 கவுன்சிலர்கள் முன்மொழிய வேண்டியிருக்கும் என்று சொல்லப்பட்டது. அதாவது, ஒன்றியத் தலைவர் பதவியை அ.தி.மு.க தக்கவைக்க மூன்றில் ஒரு பங்கு ஆதரவு தேவை என்ற நிலை. ஆனால், ஏற்கெனவே அ.தி.மு.க-வில் மூன்று கவுன்சிலர்கள் மட்டுமே இருந்த நிலையில், பா.ஜ.க-வின் ஒரு கவுன்சிலர் தனது ஆதரவை அ.தி.மு.க-வுக்கு வழங்கினால் நிச்சயம் தோகைமலை ஒன்றியம் அ.தி.மு.க தலைமையில் செயல்படும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மான அறிவிப்பு வந்த நாள் முதலே, கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினர், பிரதான கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர், மாவட்டத் தலைவர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதியும் பெறப்பட்டு, உறுதியாக அ.தி.மு.க தலைமைக்கு வாக்களிப்பதாக உத்தரவாதத்தைப் பெற்றதாக, அ.தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டது.

சுகந்தி சசிகுமார் (தி.மு.க தோகைமலை யூனியன் சேர்மன்)

ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அந்த பா.ஜ.க கவுன்சிலர் சரண்யா ராஜ்குமார், தி.மு.க-வின் தலைமைக்குச் சாதகமாக வாக்களித்துவிட்டதாக அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர். அதனால், அ.தி.மு.க தோகைமலை ஒன்றியத்தை இழக்க நேரிட்டது. இதற்கிடையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தி.மு.க-வுக்குச் சார்பாக வாக்களித்ததாக, ஒன்றிய கவுன்சிலர் சரண்யாவின் கணவரும், கரூர் மாவட்ட பொதுச்செயலாளருமான ராஜ்குமாரை பா.ஜ.க கட்சியைவிட்டு அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்வதாக, மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் அறிவித்தார். அதன்பிறகு, இரண்டு மாதம் கழித்து அவரை மறுபடியும் பா.ஜ.க-வில் சேர்த்துக்கொண்டனர். தற்போது, ஒன்றியப் பொறுப்பில் உள்ளார்.

இதற்கிடையில், அப்போது அ.தி.மு.க ஒன்றியக் குழுத் தலைவராக இருந்த லதா, ``என்மீது அடாவடியாக தி.மு.க-வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து, ஆர்.டி.ஓ-விடம் விளக்கம் கேட்டேன். இதுவரை எனக்கு எந்த பதிலும் வரவில்லை. எந்தத் தவறுகளையும் செய்யாத என்மீதும், என் கணவர்மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றனர். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தி.மு.க-வில் சேர வேண்டும் என்று பலமுறை பல நிர்வாகிகள் என்னை நேரடியாக தொடர்புகொண்டு நிர்பந்தித்தனர். ஆனால், 'நான் அ.தி.மு.க-விலிருந்து மாற முடியாது, அதுதான் என் கொள்கை' என முடிவாக இருந்தேன். அதோடு, 'பதவிக்காக ஆட்சி மாறுகிற ஆள் நான் இல்லை. நான் கட்சி மாற முடியாது' எனக் கண்டிப்பாக தெரிவித்துவிட்டேன்.

லதா (தோகைமலை யூனியன் முன்னாள் அ.தி.மு.க சேர்மன்)

ஆனால், தொடர்ந்து தி.மு.க-வின் சூழ்ச்சியால் ஓர் அ.தி.மு.க கவுன்சிலரை முதலில் விலை பேசினார்கள். பின்பு, இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற அ.தி.மு.க-வைச் சேர்ந்த எட்டு கவுன்சிலர்களையும் பேசி தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். அதனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், என்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றி, என்னைப் பதவிநீக்கம் செய்திருக்கின்றனர். திட்டமிட்டு அ.தி.மு.க-வின் எஃகு கோட்டையாக இருந்த தோகைமலை ஒன்றியத்தை சூழ்ச்சியால், அடாவடியால் தட்டிப் பறித்த கரூர் மாவட்ட தி.மு.க-வினரின் முகமூடியை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில், தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த சுகந்தி சசிகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் கரூர் மாவட்ட தணிக்கை துறை உதவி இயக்குனர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் தேர்தலுக்கு இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சசிகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாதால், அவர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரான இந்திராணி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, சுகந்தி சசிகுமார் ஒன்றிய குழு தலைவராக பதவியேற்றுக்கொண்டார்.

குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்தோடு சுகந்தி

இந்நிலையில், இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர், "செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் இப்படி அடாவடியாக அ.தி.மு.க வசம் இருந்த ஒன்றியங்களை தி.மு.க வசமாக மாற்றிவிட்டார்கள். பொய் வழக்கு, மிரட்டல் என்று பல்வேறு வகையில் அச்சுறுத்தி, அ.தி.மு.க கவுன்சிலர்களை தி.மு.க பக்கம் இழுத்தனர். கடவூர், அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் என்று அடுத்தடுத்து அ.தி.மு.க வசம் இருந்த ஊராட்சிய ஒன்றியங்களை தி.மு.க வசமாக்கினர். அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க வசம் இருந்த தோகைமலை ஒன்றியத்தையும் தி.மு.க வசமாக்க, கடந்த பிப்ரவரி மாமே முயன்று, 8 அ.தி.மு.க கவுன்சிலர்களை தி.மு.க-வுக்கு இழுத்தனர். அதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அ.தி.மு.க சேர்மன் லதா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். தற்போது, ரகசிய வாக்கெடுப்பு மூலம் தோகைமலை ஒன்றியத்தை தி.மு.க-வினர் தட்டிப் பறித்துள்ளனர். கரூர் எம்.பி தொகுதி, கரூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை ஜெயித்த தி.மு.க-வால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் ஜெயிக்க முடியவில்லை. அதனால், இப்படி அடாவடியாக எங்கள் வசம் இருந்த ஒன்றியங்களை தி.மு.க வசம் கொண்டுபோய்விட்டார்கள். இனிமேல், தி.மு.க-வினரை எங்கள் வசம் இருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளை எக்காரணம் கொண்டும் தி.மு.க-வுக்கு இழுக்கவிடமாட்டோம்" என்றார்கள்.

இதுபற்றி, செந்தில் பாலாஜி தரப்பில் பேசினால், ``அண்ணனும், அவரது சகோதரரும் தற்போது வழக்கு விவகாரத்தில் இருக்கிறார்கள். எப்போதும் எங்கள் அண்ணன் மாற்றுக்கட்சியினரை தி.மு.க-வுக்கு இழுத்ததில்லை. அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் அந்த கட்சியின் மாவட்டத் தலைமையின் போக்குப் பிடிக்காமல் அண்ணனை அணுகி, தி.மு.க-வுக்கு வர கோரிக்கை விடுப்பார்கள். அதைத்தொடர்ந்தே, அவர்களை தி.மு.க-வில் சேர்த்துகொள்வார். உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருந்தும், அ.தி.மு.க-வில் இருப்பதால், பெரிதாக செயல்பட முடியவில்லை என்று கூறிதான் தோகைமலையைச் சேர்ந்த 8 அ.தி.மு.க கவுன்சிலர்களும் தி.மு.க பக்கம் வந்தார்கள்.

செந்தில் பாலாஜி

அதோடு, அப்போது அ.தி.மு.க ஒன்றியச் சேர்மனாக இருந்த லதா, பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியதாலும், அவரது கணவரின் தலையீடு ஒன்றியக் குழுவில் அதிகம் இருந்ததாலும், தி.மு.க கொண்டு வந்த லதாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் விரும்பி வாக்களித்தனர். தற்போது, ரகசிய வாக்கெடுப்பில் தி;மு.க-வுக்கு மெஜாரிட்டி கிடைத்ததால், தி.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சுகந்தி சசிகுமார் ஒன்றியக்குழு தலைவியாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கும், எங்கள் அண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்கள்.


மேலும் படிக்க அணி மாறிய அதிமுக கவுன்சிலர்கள்; நம்பிக்கையில்லா தீர்மானம் - தோகைமலை ஒன்றியத்தை 'கைப்பற்றிய' திமுக
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top