மதுரையில் வருகின்ற 20-ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டை மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மரக்கன்று வழங்கியும், மாநாட்டின் லோகோ ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டும் நிகழ்ச்சியை மதுரையில் நடத்தி வருகிறார்கள் அதிமுகவினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்டு 20-ம் தேதி நடைபெறும் மாநாட்டை தமிழகம், இந்தியாவை கடந்து உலக மக்கள் எதிர் நோக்கியுள்ளார்கள்.

இந்த மாநாடு மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்டும் வகையில் அமையும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு, மக்கள் விரோத செயல்களில் கின்னஸ் சாதனை படைத்து வருகிறது. விலைவாசி உயர்வில், சொத்து வரி உயர்வில், பால் விலை உயர்வில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் சாதனை படைத்துள்ளது.
தமிழகம் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் பட்டா போட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பர வெளிச்சத்தில் இந்த அரசு உள்ளது. அரசு விழாக்களில் ஸ்டாலின் பேரன் இன்பநிதியும் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் தமிழகம் கருணாநிதி குடும்ப சொத்து போல நினைக்கும் அவல நிலை உருவாகி உள்ளது என்று மக்கள் வேதனை அடைகிறார்கள்.

இந்த சர்வதாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வகையில் மாநாடு அமையும். நாள்தோறும் எடப்பாடியார் திமுக அரசின் செயல்பாடுகளை தோலுரித்துக் காட்டி வருகிறார், ஆனால் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
காவேரி பிரச்னை கேள்விக்குறியாக உள்ளது. டெல்டா பகுதியில் வறட்சியால் பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால், நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு பொய் சொல்வதில் கின்னஸ் சாதனையை இந்த அரசு படைத்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் கின்னஸ் சாதனை என்று கூறுகிறார்கள். ஆனால் பொய் சொல்வதில் திமுக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு அமையும்.

தொழில் துறையில், வறுமை ஒழிப்பில் இந்த அரசு பின்னடைந்துள்ளது. மக்களே தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை. எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும், ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும். இந்த இரண்டு ஆண்டுகளில் இளைஞர்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பும், தனியார் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறினார்கள் .
ஆனால் இன்று ஒரு கோடியே பத்து லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் கல்லூரி படிப்பை முடித்து வரும் பத்து லட்சம் பேர் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், திமுக அரசு வேலை எந்த முயற்சியும் எடுக்கவில்லை
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியாரை கோட்டைக்கும், ஸ்டாலினை வீட்டுக்கும் அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். தன் தந்தையாரின் நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் சூளுரை ஏற்றுள்ளார். ஆனால், உண்மையான கள நிலவரம் அப்படி இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் திமுக தோல்வி அடையும்" என்றார்.
மேலும் படிக்க ``அரசு விழாக்களில் இன்பநிதி; தமிழகம் கருணாநிதி குடும்ப சொத்தா?!” - ஆர்.பி.உதயகுமார் காட்டம்