``சீமானை மறைமுகமாக கடுமையான விமர்சித்துள்ளாரே ராஜ் கிரண்?!”
``சமுதாய பிரச்னைக்காக இதுவரை என்ன பேசியிருக்கிறார் ராஜ் கிரண்? கேரள ஃபைல்ஸ், என்.ஐ.ஏ, சி.ஐ.ஏ விவகாரங்களின்போது இவர் என்ன செய்துகொண்டிருந்தார். சரியா? தவறா? என்ற பகுத்தாய்வு செய்யாமல் பேசியிருப்பது அபத்தமானது. சீமானை விமர்சிக்கும் தகுதி அவருக்கில்லை என்றாலும் விமர்சிக்கும் தேவை அவருக்கு வந்திருக்கிறது.”

``’சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்கிறாரே ஜவாஹிருல்லா?”
``தி.மு.க-வின் அழுத்தத்தில்தான் இவ்வாறெல்லாம் பேசுகிறார் ஜவாஹிருல்லா. இஸ்லாமியச் சிறை கைதிகள் விவகாரத்தில் திமுகவை விமர்சித்துப் பல உண்மைகளைக் கடந்த காலங்களில் அவரும் பேசியிருக்கிறார். சீமானை விமர்சித்தால்தான் கூட்டணியில் தொடர முடியும் என்ற நிலையிருப்பதால் அவர் அவ்வாறு பேசுகிறார்.”
``நீங்களும் பாஜக-வும் ஒன்றுதான் என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்!?”
``தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்க்கக் கூடிய ஒரே கட்சி நாம் தமிழர்தான். அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்க்கிறோம், பிபிசி ஆவணப்படத்தைத் திரையிட்டது நாங்கள்தான். பா.ஜ.க மேற்கொள்ளும் மக்கள் விரோத போக்குகளையும் பா.ஜ.க அரசின் தோல்விகளையும் மக்கள் மத்தியில் துணிச்சலுடன் அம்பலப்படுத்தும் கட்சி நாம் தமிழர்.”
``I.N.D.I.A கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?”
``I.N.D.I.A கூட்டணிக்குள்ளேயே ஒற்றுமையில்லை. ஒன்றிணைந்ததுபோல் காட்டிக் கொண்டாலும் வரும் நாள்களில் பிரச்னை வெடிக்கும் என்பதே எங்களது அனுமானம். I.N.D.I.A கூட்டணி வெற்றிபெற்றுவிட்டால் கூட ராகுல் காந்தியைத்தான் பிரதமராக்குவார்கள். எங்களைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் மக்களுக்கான விரோதிகள்.”

``பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமெனப் பேசுகிறீர்கள்... வீழ்த்துவதற்காக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணியையும் விமர்சிக்கிறீர்களே?”
``எங்களைப் பொறுத்தவரைக் காங்கிரஸ், பா.ஜ.க என இரு கட்சிகளும் தீய சக்திகள்தான். மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து என்ன செய்துவிட்டார்கள். நாம் தமிழர் கட்சியினர் எம்.பியாக வந்தால் மாநில உரிமைக்காகக் குரல் கொடுப்போம்.”
``மணிப்பூர் விவகாரத்தில் திமுகவை விமர்சிக்க வேண்டிய அவசியமென்ன?”
``தி.மு.கவுக்கு மணிப்பூர் கலவரம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண்களை ஆந்திரா போலீஸார் சித்தரவதை செய்தார்களே... அதுகுறித்து திமுக பேசியதா... மேலும் ஈழப் பிரச்னை, குஜராத் கலவரம் நிகழ்ந்தபோது போராடாத இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பேசி தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேட முயல்வதால் தி.மு.கவை விமர்சிக்க வேண்டியதும் அவசியம்தான்.”

``இஸ்லாமியர்கள் கணிசமாக இருப்பதால்தான் மத்திய சென்னை தொகுதியில் உங்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறாரோ சீமான்?!”
``2021 சட்டமன்ற தேர்தலில் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்டேன். மக்களவை தேர்தலில் மத்தியில் சென்னையில் போட்டியிடுகிறேன். பொதுவாகவே இப்படியான எந்த பாகுபாடுகளை பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்துபவர் சீமான். பட்டியல் சமூகத்தினருக்கு பொதுத் தொகுதியில் இடமளிக்கிறது நாம் தமிழர் கட்சி. இருப்பிடம், தொகுதி குறித்தான புரிதல் எனப் பல அம்சங்களைக் கொண்டுதான் வேட்பாளர்களை களமிறக்குகிறார் சீமான்.”
மேலும் படிக்க ``சீமானை விமர்சிக்கும் தகுதி ராஜ் கிரணுக்கு இல்லை..!” - நாம் தமிழர் பாத்திமா பர்கானா காட்டம்