நீலகிரியில் உயிரிழந்த அரியவகை பறக்கும் அணில் | அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - News In Photos
JustInfoinTamil
ஆகஸ்ட் 04, 2023
0
சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், கோட்டை கொத்தளத்தில் முதலாவது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.என்.எல்.சி கலவரத்தில் கைதுசெய்யப்பட்ட பா.ம.க-வினர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கின்றனர். அவர்களைப் பார்ப்பதற்கு அன்புமணி ராம்தாஸ் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்தார்.மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் வெள்ளி கவசத்தில் காட்சியளித்தார்.உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்.மதுரையில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.நீலகிரி : ஊட்டி ஹில்பங்க் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரியவகை இந்திய பெரும் பறக்கும் அணில் ஒன்றை வனத்துறையினர் மீட்டு உடற்கூறாய்வு செய்ய எடுத்துச் சென்றனர்.சென்னை தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அவர் முன்னிலையில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த பிறகு பேட்டி அளித்தார்.சென்னை அ.தி.மு.க அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.நீட் தேர்வில் வெற்றிப்பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஆவடி சிறப்பு காவல் பிரிவில் பணிபுரியும் காவலர் சிவராஜை கவர்னர் தமிழிசை பாராட்டினார்.சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் சூறை மீன்பிடி துறைமுகத்துக்காக கடல் ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த தீர்ப்பளித்தது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்.மின்துறையை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நவீனமயமாக்கப்படவிருக்கும் நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து, திருவனந்தபுரம் ரயில்வே மண்டல மேலாளர் எஸ்.எம்.சர்மா செய்தியாளர் சந்திப்பு நாகர்கோவிலில் நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றம்.BSNL ஊழியர் சங்கத்தின் 11-வது மாவட்ட மாநாடு, விருதுநகரில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டையின் தடையை நீக்கக் கோரியும் ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்.ஈரோட்டில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான டோக்கன்களை, 2-ம் கட்டமாக வீடு வீடாகச் சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினார்கள்.
மேலும் படிக்க நீலகிரியில் உயிரிழந்த அரியவகை பறக்கும் அணில் | அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - News In Photos
Tags
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.
அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.
எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்