நள்ளிரவில் இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் |குடியரசுத் தலைவர் வருகை - News In Photos
JustInfoinTamil
ஆகஸ்ட் 05, 2023
0
பாம்பன் ரயில் பாலத்தில் செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.கடலூர்: மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த திருச்சபை கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நெய்வேலியில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு.சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்டிக் கழிவுகளால், மாசடைந்து வரும் கடற்கரை.ஈரோடு கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறக்கக் கோரியும், கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276-யை ரத்து செய்யக் கோரியும் பாசன விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் அனுமன்பள்ளி சென்னிபாளி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஈரோட்டில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், இன்ஸ்பெக்டர்கள் கதிர்வேல், சிவக்குமார், சுரேந்திர குமார் ஆகியோர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.சேலம் நீதிமன்ற வளாகத்துக்குள் புதிய நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடிக்கல் நாட்டினர்.விருதுநகர், முத்துமாரியம்மன் கோயிலில், "குழந்தை மாரியம்மன்", சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விருதுநகரில் PWD Trust, புதுவசந்தம் மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு ராம்கோ சமூக சேவைக் கழகம், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை இணைந்து நடத்திய, 'மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வரம்' நிகழ்வு நடைபெற்றதுவிருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள மேட்டிப்பட்டியில் பகுதியில் இயங்கி வந்த தென்னை நார் உறிக்கும் ஆலையில் தீ விபத்து. சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.ராமநாதபுரம் அருகே மண்டபத்தில் தமிழக முதல்வர் பங்கேற்கும் மீனவர் மாநாட்டுக்கான இடத்தை ஆய்வுசெய்யும் தமிழக அமைச்சர்கள்.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில், முதுமலை புலிகள் காப்பக உள்மண்டல (crore zone) வனத்துக்குள் போலீஸாரை நிறுத்தியிருந்தனர்.புதுச்சேரிக்கு குடியரசுத் தலைவர் வருவதால், சாலையோர மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரி வரும் குடியரசுத் தலைவரை வரவேற்க கழிவுநீர் வாய்க்காலை திரை கொண்டு மறைக்கும் அரசு.ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சாமி திருக்கோயில் கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரத்தில் உள்ள நிலைகளில், ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி.மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் விளம்பர பதாகைகளைச் சுமந்து நின்ற இளைஞர்கள்.``ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் ஆன்சைட் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையும் இன்றி போதுமான நிதியை மத்திய அரசு தரும்." - ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.கடலூர்: 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் கடலூர் உழவர் சந்தை எதிரில் நடைபெற்றது. மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
மேலும் படிக்க நள்ளிரவில் இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் |குடியரசுத் தலைவர் வருகை - News In Photos
Tags
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.
அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.
எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்