ரஷ்யாவுடன் ஆயுதப் பேச்சுவார்த்தை, பரிசுகளுடன் நாடு திரும்பிய கிம் - சர்வதேச அரசியலில் புது `புயல்!'

0

அரசு முறை பயணமாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்யாவுக்கு கடந்த 13-ம் தேதி சென்றார். தனது குண்டு துளைக்காத ரயிலில் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் விண்வெளி நிலையத்தை அடைந்தார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய கிம், "உங்களது பரபரப்பான வேலைகளுக்கு இடையில் எங்களை அழைத்தமைக்கு நன்றி" என்றார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

அதற்கு பதிலளித்த புதின், "நான் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்" என்றார். பிறகு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷெய்குவை நேரில் சந்தித்தார் கிம். அப்போது ரஷ்யாவின் அணுசக்தி ஆயுதங்கள் குறித்து கேட்டறிந்தார். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணை, Tu-160, Tu-95, Tu-22M3 விமானங்கள், அணுசக்தி திறன்கொண்ட குண்டுகளை வீசக்கூடிய விமானங்கள் போன்றவற்றையும் அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து கடந்த 17-ம் தேதி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியாவுக்குத் திரும்பினார், கிம். அப்போது அவருக்கு சில ட்ரோன்கள், அதிநவீன குண்டு துளைக்காத உடைகள் உள்ளிட்டவை பரிசாக அளிக்கப்பட்டன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான இந்த சந்திப்பு, அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதாவது ஐக்கிய நாடுகள் விதித்திருக்கும் பல்வேறு பொருளாதார தடைகளால் உணவு, எரிபொருளுக்கு வடகொரியாவில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.

புதின்

மறுபுறம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ராணுவ உதவி செய்து வருவதால், போர் முடிவுக்கு வரவில்லை. இதனால் ரஷ்யாவுக்கு பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. எனவே இருவருக்கும் பொது எதிரியாக அமெரிக்கா இருக்கிறது. இதற்கிடையில் இரு தலைவர்களுக்கும் இடையில் நடந்திருக்கும் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், "கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ரஷ்யாவுக்குச் சென்ற கிம்-மின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தச் சந்திப்பின்போது ஆயுத ஒப்பந்தங்கள் முடிவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் ரஷ்யாவும், வடகொரியாவும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இரு நாடுகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளால் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.

அமெரிக்கா

எனவே வரும் காலத்தில் ஆயுத பரிமாற்றம் செய்து கொள்வது குறித்தும், ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக செயற்கைக்கோள்களை ஏவும் முயற்சியில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது, வடகொரியா. எனவே தங்களுக்கு அந்த விஷயத்தில் ரஷ்யா உதவ வேண்டும் என விரும்புகிறது அந்த நாடு. பதிலுக்கு அதிக அளவில் தங்களிடம் இருக்கும் ஏராளமான அணு ஆயுதங்களும், வெடி மருந்துகளும் ரஷ்யாவுக்கு வழங்க முடியும் என வடகொரியா நம்புகிறது. இதை கிம்மின் பேச்சின் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும்.

அவர், `ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் கூட்டாக இருப்போம். ரஷ்யாவின் இறையாண்மையை பாதுகாக்க ஆதிக்க சக்திகளுக்கு எதிரான புனிதப்போரை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. புதினின் அனைத்து முடிவுகளையும் வடகொரியா ஆதரிக்கிறது' எனத் தெரிவித்திருக்கிறார். பதிலுக்கு ரஷ்யா, `வடகொரியா மீது ஐக்கிய நாடுகளின் தடைகள் இருந்தாலும், அவை ரஷ்யா-வடகொரியா இடையிலான உறவை எந்த வகையிலும் தடுக்காது" எனத் தெரிவித்திருக்கிறது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கிடையில் இந்த சந்திப்புக்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்

இதுகுறித்து அந்த நாடு, `ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இது குறித்து முறையிடவிருக்கிறோம். சட்டவிரோதமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தீர்மானங்கள், பொருளாதார தடைகள் ஆகியவற்றை மீறி ராணுவ ஒத்துழைப்புக்கு இரண்டு நாடுகளும் முடிவு செய்திருக்கின்றன. இது குறித்து ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். ரஷ்யாவுடன் இணைந்து வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா உரிய பதிலடி கொடுக்கும்.

இதற்கான முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பிறகு, உரிய நடவடிக்கை எடுப்போம். வடகொரியா விடுக்கும் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த விவகாரம் மட்டுமல்ல சர்வதேச அளவில் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் சீனா பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறது.

சீனா

ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையில்தான் கிம்-புதின் இடையேயான சந்திப்பு நடந்திருக்கிறது. இதில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராணுவ ஒத்துழைப்புக்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ரஷ்யாவுக்குச் செல்லும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை அடுத்த வாரம் சந்திக்கிறார். இது மேலும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது" என்றனர்.


மேலும் படிக்க ரஷ்யாவுடன் ஆயுதப் பேச்சுவார்த்தை, பரிசுகளுடன் நாடு திரும்பிய கிம் - சர்வதேச அரசியலில் புது `புயல்!'
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top