திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் அமைந்துள்ளது திரு.வி.க அரசு கலை கல்லூரி. இங்கு சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்ட படிப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 15-ம் தேதி திருவாரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவாரூர் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கமானது நடைபெற உள்ளது.

அதற்காக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க வின் திருவாரூர் மாவட்ட செயலாளருமான பூண்டி. கே.கலைவாணன், திரு.வி.க கல்லூரியின் முதல்வருக்கு தி.மு.க வின் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கில் தங்களது கல்லூரியில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்படி கேட்டு, கடிதம் அனுப்பி இருந்தார். இக்கடிதம் கடந்த 11-ம் தேதி அனுப்பியதாக தெரிகிறது.

அதனடிப்படையில் நேற்று முந்தினம், அதாவது 12-ம் தேதி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில், `சனாதன எதிர்ப்பு’ குறித்த தங்களுடைய ஆழ்ந்த கருத்துக்களை கலைஞர் கோட்டத்தில் நடைபெறும் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கில் தெரிவிக்குமாறு கூறி, கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட சுற்றறிக்கையானது மாணவர்களுக்கு அனுப்பட்டு இருந்தது.
கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கையை கண்டித்து கருத்து தெரிவித்தனர்.
In Tamilnadu, Govt Arts college , Thiruvarur is requesting the college students to participate and share their views on
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 13, 2023
" Opposing #Sanathan" on the occasion of Fr CM #Annadurai birth anniversary
@dmk govt is poisoning the minds of students .
Is it not against consititution?? pic.twitter.com/oTRNcZHmfv
இதனிடையே மாணவர்களுக்கு திருத்தப்பட்ட சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில், ``இக்கல்லூரி சுற்றறிக்கை நாள் 12-9-2023-ல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும் கல்லூரி மாணவிகள், தங்களின் கருத்துக்களை முதல்வரின் சுற்றறிக்கையின் படி அல்லாமல் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே மேற்காண் பொருள் குறித்த செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்சையான சனாதன எதிர்ப்பு குறித்தான கல்லூரி நிர்வாகத்தின் சுற்றறிக்கை குறித்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ``திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி சனாதனம் குறித்த சுற்றறிக்கையானது அனுப்பப்பட்டது. அதில் சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்துக்களை மாணவிகள் தெரிவிக்குமாறு கூறப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை தவறான புரிதலின் அடிப்படையில் திரிக்கப்பட்டு செய்தியாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. சனாதனம் குறித்த கல்லூரியின் சுற்றறிக்கையானது யாருக்கும் சாதகமகவோ, பாதகமாகவோ இல்லாமல், நடுநிலைத் தன்மையோடு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையாகும்.
மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தங்களின் சுய விருப்பத்தின் பெயரிலேயே செயல்படலாம்..! என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் 12-ம் தேதி வெளியான சுற்றறிக்கையானது திருத்தப்பட்டு, தற்போது புதிய சுற்றறிக்கை மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்கல்லூரியின் முதல்வர் ராஜாராமன் அவர்களிடம் இந்த சர்ச்சை சுற்றறிக்கை குறித்து நாம் பேசிய போது, ``கடந்த 12-ம் தேதி எங்களது கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் "சனாதன எதிர்ப்பு" பற்றிய தங்களுடைய ஆழ்ந்த கருத்துக்களை தெரிவிக்கும்படி சுற்றறிக்கையானது தவறாக அனுப்பப்பட்டு விட்டது. அதில் சனாதனம் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும்படி தான் கூறப்பட வேண்டி இருந்தது. ஆனால் எழுத்துப் பிழையின் காரணமாக "சனாதன எதிர்ப்பு" என்று தவறாக கூறப்பட்டு விட்டது.
மேலும், எங்களது கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவோ, எதிராகவோ செயல்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எங்களது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 18 வயதை பூர்த்திஅடைந்தவர்கள், அவர்கள் அனைவருக்கும் கருத்து தெரிவிக்க முழு சுதந்திரம் உள்ளது. எனவே கல்லூரி நிர்வாகம் மாணவர்களை எந்த ஒரு கருத்தை பற்றியும் நிர்பந்தித்து பேச வைக்க வேண்டிய அவசியமில்லை. சனாதனம் பற்றி கருத்து சொல்வதற்கும், சொல்லாமல் இருப்பதற்கும் மாணவர்களுக்கு உரிமை உண்டு. எனவே இந்த சுற்றறிக்கை திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பெயரிலே செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க சனாதனம்: சர்ச்சையான அரசு கல்லூரியின் சுற்றறிக்கை... `எழுத்துப் பிழை’ - கல்லூரி முதல்வர் சொல்வதென்ன?