கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் – ரதி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை, திருச்செந்தூரில் கடத்தப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸ், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் – திலகவதி தம்பதியை தேடி வந்தனர்.

செல்போன் நெட்வொர்க் அடிப்படையில் இருவரும் கோவை பூண்டி அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கோவை ஆலாந்துறை காவல்துறையினர், இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் காவல்நிலையம் வந்த சிறிது நேரத்தில் திலகவதி உயிரிழந்தார். போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்ததால் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்ததால் இதுதொடர்பாக கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் விசாரணையை தொடங்கியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் திலவகதி உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் திலகவதி மரணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் கூறுகையில், “திருச்செந்தூர் காவல்துறையிடம் அவர்களை ஒப்படைப்பதற்கு காத்திருந்தோம். சில அடிப்படை விஷயங்களை மட்டும் விசாரித்தோம். அப்போது திடீரென கழிவறை சென்ற திலவகதி, வெளியே வந்த சில நிமிடங்களில் சரிந்து விழுந்து இறந்துவிட்டார். அவரது, மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் ரத்தம் வந்தது.

அவரின் கையில் வெள்ளை நிறத்தில் ஒரு பொடி ஒட்டியிருந்தது. கைது செய்யப்பட்ட பிறகு அவர் விஷத்தை சாப்பிட்டாரா என்ற சந்தேகம் உள்ளது. அந்தப் பொடியை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பிரேத பரிசோதனை மற்றும் ஆய்வக முடிவுகள் வந்தப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியும்.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க கையில் ஒட்டியிருந்த `மர்ம பொடி' - கோவை காவல்நிலையத்தில் உயிரிழந்த பெண் வழக்கில் புதிய தகவல்