கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, மாணவர்கள் 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியைச் சுட்டிக்காட்டி, 14 வயது 2 மாதங்களான, ஷ்ரேயா என்ற மாணவிக்கு, தாம்பரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் சேர்க்கை வழங்க மறுத்தது. இதை எதிர்த்து, விமானப்படை அதிகாரியின் மகளான ஷ்ரேயா தாக்கல் செய்த வழக்கை, நீதிபதி சேஷசாயி நேற்று விசாரித்தார்.

கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தரப்பில், மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது நிர்வாகத்தின் முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், மாணவி 30 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வேறு பள்ளியில் படிக்கிறார் என்பதற்காக விதிகளை தளர்த்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி சேஷசாயி, மாணவர் சேர்க்கை விதிகள், கல்வெட்டுபோல கற்களில் பொறிக்கப்பட்ட ஆணை என்றோ, அதற்கு வளைந்து கொடுக்கும் தன்மை இல்லை என்றோ கருத வேண்டுமா... அல்லது சாலமனின் 10 கட்டளைகள்போல மாறாத ஒன்று என கருத முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடினால் மட்டும் போதாது எனவும், பெண் குழந்தைகளின் உரிமைகளைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோரை குற்றம் சொல்வதா... இல்லை, விதிமுறைகளை குற்றம் சொல்வதா எனத் தெரியவில்லை எனவும் கூறினார்.

இது போன்ற விதிகளால் நாடு முழுவதும் பல மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால், அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்றம் செயல்பட்டதுபோல ஆகிவிடும் எனவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, தேசத்தின் சொத்தான மாணவர்களைக் காப்பாற்ற வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என தெரிவித்த நீதிபதி, மாணவிக்கு எட்டாம் வகுப்புக்கான சேர்க்கை அளிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க மாணவர் சேர்க்கை விவகாரம்; கேந்திர வித்யாலயா நிர்வாகத்துக்கு `குட்டு'வைத்த நீதிமன்றம் - என்ன நடந்தது?