மதுரை வந்திருந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"லியோ ஆடியோ லாஞ்ச் தடைபட்டதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் சொல்லப்படுகிறதே?" என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி.தினகரன்,
"இதையெல்லாமா திமுக செய்றாங்க? திரைப்படத்துறை, அதன் பிரச்னைகள் குறித்து எனக்கு முழுமையாக தெரியவில்லை." என்றார்.

"நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அமமுக-வுக்கு பின்னடைவு ஏற்படுமா ?" என்று கேட்டதற்கு,
"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் மக்கள்தான் முடிவு செய்வார்கள்" என்றவரிடம்,
"பாஜக கூட்டணியில் இணைவீர்களா?" என்றதற்கு,
"கூட்டணி குறித்து தற்போது எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து டிசம்பர் மாதம் தெரிவிக்கப்படும்." என்றார்.
"அமமுக மற்றும் சசிகலாவின் வளர்ச்சியை பாஜகதான் தடுத்தது, மீண்டும் அங்கு இணைவீர்களா?" என்ற கேள்விக்கு,
"பாஜகவில் உள்ளவர்கள் என்னோடு பேசிவருகின்றனர். அவர்கள் யார் என்பதை குறித்து தெரிவிக்க விரும்பவில்லை. இருந்தபோதிலும் ஒரு கட்சி மற்றொரு கட்சியின் வளர்ச்சியை தடுப்பது இயற்கையான ஒன்று, அதையெல்லாம் தாண்டி ஒரு கட்சி வளர வேண்டியுள்ளது. அப்படி வளர்வதுதான் அந்த கட்சியின் கடமை" என்றார்.

"முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுக-வில் வளர்ச்சி பெற்ற வருவதாக இணையத்தில் பரவும் தகவல்" குறித்த கேள்விக்கு
"இணையத்தில் பரவும் எல்லா செய்திகளும் உண்மையாக இருப்பதில்லை. இருந்த போதிலும் அதிமுகவில் நடப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது." என்றார்.
"திராவிட மாடல் ஆட்சியில் கிராம சபைக் கூட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளாரே” என்ற கேள்விக்கு,
"முதலமைச்சர் சொன்னது சரியானதுதான். ஆளுநருக்காக அவ்வாறு தெரிவித்திருக்கலாம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை, போதை கலாசாரம், மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்னைகள் உள்ளது. அதேபோல் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் செயல்படுத்தாமல் உள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிட்லர் ஆட்சி போல தான் ஸ்டாலின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு வரும்காலத்தில் மக்கள் முடிவுகட்டுவார்கள்." என்றார்.
"தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஸ்டாலின் அறிவித்துள்ளது" குறித்த கேள்விக்கு,
"2014 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறவில்லை, அதற்கு அவர் பொறுப்பேற்றாரா? அவர்களால் ஒரு ஒன்றிய செயலாளர் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாது." என்றார்.

"தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு நன்மையில்லை என தெரிவிக்கப்படும் கருத்து" குறித்த கேள்விக்கு
"தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான காவிரி பிரச்னை தீர்க்கப்படவில்லை. கர்நாடகாவில் வன்முறை தூண்டப்படுகிறது. இதேபோல் தான் முல்லைப்பெரியாறு அணையிலும் பிரச்னை எழுந்தது. அதனால் தேசிய கட்சிகளால் மாநிலங்களுக்கு பயனில்லை என்பது உறுதியாகிறது. மாநில கட்சிகள் வலுவாக இருந்தால்தான் மாநில பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுய ஆட்சி என்பதுதான் அண்ணாவின் கொள்கை" என்றார்

``அதிமுக - பாஜக கூட்டணியில் பிரிவு ஏற்பட என்ன காரணம்?" என்ற கேள்விக்கு
"பாஜக அதிமுகவை கைவிட்டால், அதிமுக சின்னாபின்னமாகிவிடும். பழனிசாமி தனது தலையில் கொல்லிக்கட்டையை தேய்த்துக் கொண்டார். பழனிசாமி தனக்கு உதவி செய்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் பழக்கம் கொண்டவர். தற்போது தனது ஆட்சியை காப்பாற்றிய பாஜகவுக்கு நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறார். இதனால் அதிமுக நெல்லிக்காய் மூட்டை போல சிதறி விடும். நாங்கள் ஜனநாயக முறையில் போராடி வருகிறோம். ஏற்கனவே நாங்கள் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் முன்னேறி இருப்போம். ஆனாலும் தற்போது நாங்கள் தோல்வியடைந்து வருவதை பின்னடைவாக பார்க்கவில்லை. பயிற்சியாக தான் பார்க்கிறோம். வருங்காலத்தில் வெற்றி பெறுவோம். குக்கர் சின்னத்தை வைத்து அதிமுகவை மீட்போம்." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க LEO: ``இதையெல்லாமா திமுக செய்றாங்க?!" - லியோ ஆடியோ லாஞ்ச் குறித்து டிடிவி தினகரன்