பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்து... 4 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்!
பிகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே நேற்று இரவு 9.35 மணி அளவில், 21 பெட்டிகள் கொண்ட வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.
விபத்தில் சிக்கிய இந்த ரயில் டெல்லியில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு புறப்பட்ட ரயிலாகும். ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. விபத்தில் காயமடைந்தவர்கள் தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மீட்புப்பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும், இந்த தடம் வழியே செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க Tamil News Live Today: பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்து... 4 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்!