இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இரவிலிருந்து விடாமல் மழை பெய்துகொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்.
Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து குறித்து ஈஸ்ட் கோஸ்ட்டல் ரயில்வே அதிகாரி பிஸ்வஜித் சாஹு கூறுகையில், "இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர், 50 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மீட்புப் பணிகள் தற்போது முடிந்துவிட்டன. சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 22 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.” என்றார்.
மேலும் படிக்க Tamil News Today Live: Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு - மொத்தம் 18 ரயில்கள் ரத்து!