காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!









காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசையும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள், விவசாய அமைப்புகள் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த கடையடைப்பு போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க Tamil News Today Live: காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!